×
 

அமைச்சர் காலில் விழுந்த கத்திரிக்கோல்!! ரத்தக்காயத்தால் அவதி! அபசகுனமாகுமோ என அச்சம்!

அரூரில், தி.மு.க., தேர்தல் அலுவலக திறப்பின் போது, அமைச்சர் வேலுவின் காலில் ரத்த காயம் ஏற்பட்டதன் எதிரொலியாக, நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வராததால், தேர்தல் அலுவலகம் வெறிச்சோடி உள்ளது.

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் தி.மு.க. தேர்தல் அலுவலக திறப்பு விழாவின்போது அமைச்சர் வேலுவுக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தின் எதிரொலியாக, தேர்தல் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. நிர்வாகிகளும் தொண்டர்களும் யாரும் வராத நிலை நீடித்து வருகிறது.

கடந்த 9ஆம் தேதி அரூர் கச்சேரிமேட்டில் தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்தார். ரிப்பன் வெட்டிய பிறகு, அருகில் இருந்த நகரச் செயலர் முல்லைரவியிடம் கத்தரிக்கோலை வழங்கியபோது, அதை முல்லைரவி தவறவிட்டார். கத்தரிக்கோல் நேராக அமைச்சர் வேலுவின் இடது பாதத்தில் விழுந்து ஆழமான காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டியதால் அமைச்சர் உடனடியாக மருத்துவ உதவி பெற்றார்.

இந்தச் சம்பவம் தி.மு.க.வினரிடையே பெரும் பேச்சாகியுள்ளது. பல நிர்வாகிகள் இதை அபசகுனமாகக் கருதுகின்றனர். தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு மேலாகியும், தொகுதி வேட்பாளர் சண்முகம் உள்ளிட்ட தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் அலுவலகத்துக்கு வருவதில்லை என்று கட்சியினரே தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: காட்பாடி வேட்பாளர்னு என்னை சொல்லாதீர்கள்!! துரைமுருகன் கோவம்!! தலைமை அறிவிக்கட்டும் என சமாளிப்பு!

காலையில் பெயரளவுக்கு திறக்கப்படும் அலுவலகம், மாலையில் நுழைவாயிலில் இரும்புக் கம்பியால் தடுக்கப்பட்டு விடுகிறது. தொண்டர்கள் வராததால் அலுவலகம் முழுவதும் வெறிச்சோடிய நிலையில் உள்ளது. இந்த நிலை தி.மு.க.வினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அரூர் தொகுதியில் தி.மு.க.வுக்கு இந்த முறை கடும் போட்டி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தல் அலுவலகம் செயல்படாத நிலை, கட்சியின் அமைப்பு ரீதியான பலவீனத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. 

தி.மு.க.வின் உள்ளூர் நிர்வாகிகள் இந்தச் சம்பவத்தை “அபசகுனம்” என்று கருதி, அலுவலகத்துக்கு வருவதைத் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் பிரசாரப் பணிகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரூர் தொகுதியில் தி.மு.க. தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியிருப்பது பெரும் பேச்சாகியுள்ளது.

இதையும் படிங்க: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!! எச்சரிக்கிறேன்!! மீஞ்சூர் சம்பவம்! திமுக அரசுக்கு அண்ணாமலை வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share