மகளிர் உரிமைத் தொகை...! தமிழ்நாடே கொந்தளிக்கும்... பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை..!!
மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடை கொந்தளிக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
2023 செப்டம்பர் 15-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் ஒரு கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் பல லட்சம் பெண்கள் மேலும் சேர்க்கப்பட்டனர். தற்போது 1.31 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.
இது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் பெரிய நேரடி பணப் பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்தத் தொகை சாதாரணமாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி அல்லது அதற்கு அருகில் வரும். இதை வைத்து பெண்கள் வீட்டு அன்றாடச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவத் தேவைகள், சிறு சிறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிகிறது.
பிப்ரவரி 13 அன்று ஒரே நாளில் 1.31 கோடி பெண்களின் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது. இதில் பிப்ரவரி மாதத்திற்கான ரூ.1,000-உடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.2,000, மேலும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 சேர்த்து மொத்தம் ரூ.5,000 ஆகும். இதற்காக அரசு தனியாக ரூ.6,550 கோடி ஒதுக்கியது.
இதையும் படிங்க: அரச்ச மாவையே அரைக்கும் பட்ஜெட்..!! DMK ALL FAIL... நயினார் விளாசல்..!!
இந்த நிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பேசினார். அப்போது, மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்தார். ஆயிரம் ரூபாய் கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் 5000 ரூபாய் கொடுப்பேன் என்ற முதலமைச்சர் கூறுவதாக தெரிவித்தார். அந்தக் கொந்தளிப்பு இருக்கும் வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆளுகிறார் என்று அர்த்தம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சமூக நீதியைக் காப்பாற்றும் திராவிட மாடல்..! நிதி தராமல் அலைக்கழிக்கும் பாஜக... அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!