ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரஸ்... கே.எஸ்.அழகிரிக்கு பதிலடி கொடுத்த திமுக அமைச்சர்...!
மூக்கு ,வாய் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.எல்லா தேர்தலும் இப்படி தான்.அவரவர் அவர்களுடைய விருப்பதை தெரிவிப்பார்கள் என காங்கிரஸ் கட்சியில் எழும் கோரிக்கை குறித்த கேள்விக்கு பங்கு குறித்த கேள்விக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்ற மன்னர் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, கேட்பது அவர்களது உரிமை அதில் ஒன்றும் நாம் குறை சொல்ல முடியாது. அதை தலைவர் பார்த்து கொள்வார். அது அகில இந்திய அளவில் இருக்கும் கட்சி, எங்களோடு கூட்டணியில் இருக்கும் கட்சி. அதிலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் முடிவு செய்வார்கள். இது குறித்து யாரும் சங்கட படவோ ஒன்றுமில்லை.
இந்த கூட்டணி வலுவாக உள்ளது. அதனால் அவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு கண்,காது,மூக்கு ,வாய் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா தேர்தலும் இப்படி தான் அவரவர் அவர்களுடைய விருப்பதை தெரிவிப்பார்கள். அதனை தலைமை பேசி முடிவு செய்வார்கள் என்றார்.
கேரளாவில் நடைபெறும் ஐயப்பா பக்தர்கள் சங்கமம் குறித்த கேள்விக்கு, இது மிகவும் தவறான கருத்து யாரோட நம்பிக்கையையும் திராவிட கட்சிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோ இதை சிதைப்பது இல்லை. அவர்கள் உச்சநீதிமன்ற அறிவுத்தலின் படி நடக்கிறதை சிதைப்பது என்பது சொல்லுவதை ஏற்று கொள்ள முடியாது.
இதையும் படிங்க: “என்னையா அழ விட்டீங்க”... திமுகவின் கூட்டணி அஸ்திவாரத்தை அசைக்க ஆரம்பித்த கே.எஸ்.அழகிரி... போட்டாரே ஒரு போடு...!
சங்கமம் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவது தான் அரசின் கடமை மக்கள் அதை விரும்பினால் அதை அரசு முன்னெடுக்கும் .அதே போன்று திராவிட முன்னேற்ற கழகம் மாநாடு நடத்தியதை சிலர் விமர்சித்தனர். நடத்தினாலும் விமர்சனம், நடத்தாவிட்டாலும் விமர்சனம் எனவே இந்த விமர்சனத்துக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டு இருக்க முடியாது என்றார்.
இதையும் படிங்க: கண்ணீர் விட்டு காரியத்தை சாதித்த துரை வைகோ... திமுக சதி வலையில் இருந்து தப்பிய மதிமுக...!