ஃப்ரிட்ஜை தூள் தூளாக்கப் போகும் திமுக... தமிழக மகளிருக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கதாநாயகனை களமிறக்கும் ஸ்டாலின்...!
தமிழக தேர்தல் களத்தில் இபிஎஸின் இலவச ஃப்ரிட்ஜ் குறித்த அறிவிப்பே பேசுபொருளாக உள்ளது.
எல்லாக் கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் கவனம் செலுத்திவருகின்றன. தனித்து நிற்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை என அனைத்தையும் வெளியிட்ட நிலையில், தற்போது அது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. திமுகவோ இன்னும் ஒரு சில கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுகவோ கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தொகுதிப் பங்கீடுகளை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட தயாராகி வருகிறது. அது, தற்போது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
ரூபாய் 2,000/- வழங்கப்படும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும், 'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, மானியத்துடன் இருசக்கர வாகனம், முதியோர் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்வு, குடும்பத்துக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என ஏற்கனவே கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் முழு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்பதனப் பெட்டி (Fridge) விலையில்லாமல் வழங்கப்படும் என அதிரடி திட்டத்தை அறிவித்தார். தமிழக தேர்தல் களத்தில் இபிஎஸின் இலவச ஃப்ரிட்ஜ் குறித்த அறிவிப்பே பேசுபொருளாக உள்ளது. குறிப்பாக தமிழக மகளிரைக் கவரும் வகையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு இபிஎஸை மவுசை திடீரென உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் நேரு மீதான முறைகேடு விவகாரம்... அரசு அனுமதிக்கு வெயிட் பண்ணனுமா? லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்..!!
ஏற்கனவே மகளிரைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ள திமுக தலைமை, இலவச ஃபிரிட்ஜ் அறிவிப்பை காலி செய்ய வியூகம் வகுத்து வருகிறார்களாம். கருணாநிதி அவர்கள் எப்போதுமே தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என அழைப்பது உண்டு. அப்படித்தான் 2006ம் ஆண்டு வெளியான திமுக தேர்தல் அறிக்கை அரசியல் களத்தையே புரட்டிப்போட்டது.
நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வீட்டுக்கு ஒரு கலர் டி.வி. என அறிவிப்புகளை வெளியிட்டார் கலைஞர். இலவச கலர் டி.வி. திட்டம் பட்டி, தொட்டி வரை ரீச் ஆனதை அடுத்து திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கிராமங்கள் தோறும் கலர் டி.வி. வழங்கி ஆட்சியைப் பிடித்த கலைஞர் பாணியில், தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப வீட்டிற்கு ஒரு இலவச எல்.இ.டி. டி.வியை வழங்கலாம் என திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசித்து வருகிறார்களாம்.
ஃப்ரிட்ஜ் வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை மட்டுமே கவரும், அதுவே எல்.இ.டி. டி.வி என்றால் ஒட்டுமொத்த குடும்பத்தின் ஓட்டுக்களையும் கவர்ந்துவிடலாம் என திமுக கணக்குப்போடுவதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் அதிமுக எப்படி ஃபிரிட்ஜ் கொடுத்து மகளிர் வாக்குகளை அள்ள நினைக்கிறதோ, அதை விட தூளாகவும் வேலைகளை குறைக்க பெண்களுக்கு உதவும் வகையிலும் இலவச வாஷிங் மெஷன் வழங்கலாம் என திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர்களை ஜெயிக்க வைக்க டீலிங்... அதிமுக தொகுதி ஒதுக்கீட்டை விமர்சித்த சீமான்..!!