×
 

மு.க.ஸ்டாலினின் இல்லத்தரசி திட்டம்! ரூ.4,000 கோடி ஊழலுக்கு வழிவகுக்கும்!! திமுக மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!

திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த இல்லத்தரசி திட்டத்தின் மூலம் சுமார் ரூ.4,000 கோடி வரை ஊழல் நடக்க வாய்ப்புள்ளதாக பாஜவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த இல்லத்தரசி திட்டத்தின் மூலம் சுமார் 4,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற வாய்ப்புள்ளதாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. அறிவித்துள்ள ரூ.8,000 கூப்பன் திட்டம் பெரும் மோசடிக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார். இந்தத் திட்டத்தின்படி வீட்டு உபயோகப் பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு அரசு கூப்பன் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது மக்கள் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடி ரூபாயை கொள்ளையடிக்கும் திட்டம் என அவர் விமர்சித்தார்.

“ஒரு பிரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷினின் விலை 12,000 ரூபாய்க்குக் குறைவாக இருக்காது. ஆனால் எக்ஸ்சேஞ் ஆபர் என்ற பெயரில் பழைய பொருட்களுக்கு 5,000 ரூபாய் வரை மதிப்பு கொடுப்பதாகக் கூறி ஏமாற்றும் வேலை நடக்கும் வாய்ப்பு அதிகம். உண்மையில் பழைய 180 லிட்டர் அல்லது 300 லிட்டர் பிரிட்ஜ், தானியங்கி வாஷிங் மெஷின்களின் உண்மை மதிப்பு வெறும் 400 முதல் 800 ரூபாய் மட்டுமே” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் ரகசிய சர்வே! திமுக திடீர் ப்ளான்!! அதிருப்தியில் உள்ள மகளிரை சமாதானப்படுத்த முயற்சி!

மேலும், அரசு விற்பனையாளர்களுக்கு 8,000 ரூபாய் கூப்பன் கொடுத்தால், அவர்கள் பொருளை விற்காமலேயே 2,000 ரூபாய் குறைத்து 6,000 ரூபாய் ரொக்கமாக மட்டும் கொடுக்க முன்வருவார்கள் என்று கூறினார். பின்னர் அதே பொருட்களை குறைந்த விலையில் மற்றவர்களுக்கு விற்று வரி ஏய்ப்பு செய்யும் வாய்ப்பு உள்ளது. இது தொழில் துறையையும் பெரிதாக பாதிக்கும் என்று எச்சரித்தார்.

“திராவிட மாடல் என்று மார்தட்டும் தி.மு.க. அரசு, தமிழகத்தில் பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் இல்லாத வீடுகளே இல்லை என்பதை நன்கு அறிந்தே இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. இலவசங்கள் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாயை அபகரிக்கும் மோசமான சதித்திட்டம் இது” என்று நாராயணன் திருப்பதி கூறினார்.

குறிப்பாக, 2 கோடி குடும்பங்களிடம் இருந்து தலா 2,000 ரூபாய் பறிக்கப்பட்டால் மொத்தம் 4,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெறும் சாத்தியம் உள்ளது என்று அவர் கணக்கிட்டுக் காட்டினார். கடந்த காலங்களில் இதுபோன்ற கூப்பன் மற்றும் தவணை முறை திட்டங்களில் பெரும் மோசடிகள் நடைபெற்றதை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் இந்தத் திட்டத்தை உஷாராக அணுக வேண்டும் என்று எச்சரித்தார்.

இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

இதையும் படிங்க: விஜய் கூட கூட்டணியா? அது எங்களுக்கு தப்பா போயிரும்!! டெல்லியில் உடைத்து பேசிய அமித்ஷா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share