அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!
மின் கட்டணம் பல மடங்கு கூடுதலாக வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்தம்பட்டியில் உள்ள மின்வாரிய மண்டல உதவி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
2000 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் , தற்போது 20 ஆயிரம் ரூபாய் வரை கணக்கிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை , கணக்கெடுத்து மின் கட்டணம் வசூலிப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக மின் கட்டணம் கூடுதலாக கணக்கிடுவதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் கூறிவந்தனர்.
இந்த நிலையில் , இந்த மாதம் மின் கட்டண கணக்கெடுப்பில் ஏராளமானோருக்கு பத்தாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை கூடுதலாக கட்டணம் விதித்திருப்பதால் , அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இன்று அஸ்தம்பட்டி மண்டல மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.
இதையும் படிங்க: “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!
தாங்கள் இதுவரை 2000 ரூபாய் 2500 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் , தற்போது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்ட வேண்டும் என கணக்கிட்டுள்ளனர். 100 யூனிட் இலவச இலவசம் வழங்கி வந்த நிலையில் தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த உடன் ஜோசப் விஜய் 200 யூனிட்டாக இலவசத்தை உயர்த்தி அறிவித்தார்.
இதனால் தங்களுக்கு மின் கட்டணம் குறைய வேண்டும். ஆனால் இப்போது பன்மடங்கு கூடுதலாக கட்டண வசூலிக்கின்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் தவறாக கணக்கீடு செய்து , கட்டணம் விதிக்கின்றனர். பயன்படுத்தாத மின்சாரத்திற்கு பணம் வசூலிக்கின்றனர் என்று மின்வாரிய உதவி பொறியாளர்
மஞ்சு பிரியதர்ஷினியிடம் புகார் கூறினார்.
இதனை அடுத்து வீடுகள் தோறும் கணக்கீடு செய்யும் ரீடிங் மேன் (Reading man) கன்னியப்பன் மற்றும் ரிவென்யூ சூப்பர்வைசர் கீதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் , கூடுதல் மின் கட்டணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் தெரிவித்தார். இதனை அடுத்து , தவறாக கணக்கிட்டுள்ள மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் கட்டணம் செலுத்த மாட்டோம் என பொதுமக்கள் உறுதியாக கூறிவிட்டு, கலைந்து சென்றனர்..
இதையும் படிங்க: 600 கிலோ வெள்ளி கொள்ளையில் அதிரடி திருப்பம்... சிக்கியது முக்கிய க்ளூ... அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தனிப்படை...!