×
 

திமுக திட்டம் இதுதான்! அமித்ஷாவிடம் போன் போட்டு பேசிய பழனிசாமி! தொகுதி மறுவரையறை பத்தி தெளிவு படுத்துங்க!!

தொகுதி மறுவரையறையை தி.மு.க., அரசியலாக்கி வருவதால், இது தொடர்பாக தெளிவான விளக்கத்தை அளிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தியதாக தெரிகிறது.

பார்லிமென்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தி.மு.க. அரசியலாக்கி வரும் நிலையில், அதை முறியடிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெளிவான விளக்கம் கோரியுள்ளார் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி.

லோக்சபா தொகுதி எண்ணிக்கையை அதிகரித்தால் தமிழகத்தின் தொகுதிகள் குறையும் என்றும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கும் என்றும் தி.மு.க. தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. 

இதனை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டம், பா.ஜ. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பார்லி.,-யை கைப்பற்ற திட்டமிடும் பாஜக! ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் - கார்கே சூளுரை!

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசியில் பேசிய பழனிச்சாமி, “தமிழகத்தின் தொகுதிகள் குறையும் என தி.மு.க. தவறான பிரசாரம் செய்கிறது. இதை முறியடிக்க மத்திய அரசு உடனடியாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த உரையாடல், அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெளிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், பா.ஜ. தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழக லோக்சபா தொகுதி எண்ணிக்கை 20 அதிகரித்து 59 ஆக உயரவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஸ்டாலினும் தி.மு.க.வினரும் மசோதா நகலை ஏன் எரிக்கிறார்கள் என புரியவில்லை. இந்த செயல் நாட்டுக்கும் பெண்களுக்கும் எதிரானது” என்று கடுமையாக விமர்சித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உதவும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், தி.மு.க.வின் போராட்டம் தேர்தல் களத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. 

அ.தி.மு.க.வும் பா.ஜ.வும் இணைந்து செயல்படும் சூழலில், தி.மு.க.வின் இந்த நடவடிக்கை கூட்டணிக்கு சவாலாக மாறியுள்ளது. மத்திய அரசு விரைவில் தெளிவான விளக்கம் அளித்தால், தி.மு.க.வின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று அ.தி.மு.க. தரப்பு நம்புகிறது.

தமிழக அரசியலில் தொகுதி மறுவரையறை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடு முழுவதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்று ஒரு தரப்பும், தமிழகத்துக்கு நஷ்டம் என்று மற்றொரு தரப்பும் வாதிடும் நிலையில், பழனிச்சாமியின் தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.
 

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்!! வதந்திங்களை பரப்பாதீங்க! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு கண்டிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share