×
 

தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதாக eps தரப்பினர் குற்றம்சாட்டினர்.

மூன்று அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என்றும் 25 பேர் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து மனுக்கொடுத்த நிலையில், இபிஎஸ் தரப்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது, கட்சி தாவல் புகார் இருக்கும் போது ராஜினாமாவை இருக்க முடியாது என அதிமுக எம்பி இன்ப துரை தெரிவித்தார்.

சபாநாயகரின் நடவடிக்கைகளிலும் நீதிமன்றம் தலையிட்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார். கட்சித்தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த மனு நிலுவையில் இருக்கும் போது ராஜினாமாவை ஏற்றது சட்டவிரோதம் என்றும் தெரிவித்தனர். தங்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்ந்து விடும் என்பதால் பயந்து தான் மூன்று பேரும் ராஜினாமா செய்திருப்பதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ராஜினாமாவை வரவேற்றால் அது குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் குதிரை பேரம் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்த ஐந்து நிமிடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை தரப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இது தலைமைச் செயலகமா அல்லது தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகமா என அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா.? கட்சித் தாவல் சட்டம் பாயணும்..! போர்க்கொடி தூக்கிய EPS தரப்பு..!!

அரசிதழில் வெளியாகும் முன்னரே மூவரும் தமிழகத்தில் கழகத்தில் இணைந்து உள்ளனர் என கூறினார். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் எல்லாம் இல்லை என்றும் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற முடிவை திரும்ப பெறவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் தெரிவித்து உள்ளனர். 

இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடி.. விஞ்ஞான ஏமாற்று வேலை..! EPS கடும் குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share