“கேவலமான ஆட்சி”..! மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் ஸ்டாலின் தான்..! விளாசிய EPS..!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு இடங்களில் திமுக அரசின் குறைபாடுகளை கூறி வருகிறார்.
இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராகரித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தவறாக பேச வேண்டிய அவசியம் தனக்கே இல்லை என்றும் எங்கள் ஆயுடத்தை எதிரிகளை தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுகவில் தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும் என்றும் தெரிவித்தார். மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார்.
போதை பொருள் புழக்கம் குறித்தும் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதியான சேப்பாக்கத்தில் நடந்த இந்த பரப்புரையின் போது நீட், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். மூளை முடுக்கெல்லாம் போதை பொருள் விற்பனை பரவி கிடப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: எவ்ளோ வாய் கொழுப்பு இருக்கும்..? முதல்வர் குறித்த பேச்சு... இபிஎஸ்-ஐ பந்தாடிய ஆர்.எஸ். பாரதி..!!
திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பம் ஏராளம் என்றும் பாலியல் சீண்டல் குறித்தும் பேசிய அவர் கேவலமான ஆட்சி தேவையா என்று தெரிவித்தார். விலைவாசி உயர்வு விண்ணை மூட்டும் அளவுக்கு இருப்பதாகவும் ஊழல் செய்வதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்றும் குறிப்பிட்டார். கொரோனாவில் ஸ்டாலினை எங்கும் காணவில்லை என்பதால் அவரை காணாமல் போனவர் என்று கூறியதாக விளக்கம் கொடுத்தார்.
இதையும் படிங்க: அவரும் கொரோனால போயிருப்பாரு..! ஸ்டாலினை இழுத்துவிட்ட EPS..! கொந்தளித்த அன்பில் மகேஷ்..!!