எதுவும் தேறாதுன்னு தெரிஞ்சு கீழ்த்தரமாக விமர்சிக்கும் இபிஎஸ்..!! பரப்புரையில் கனிமொழி குற்றச்சாட்டு..!
முதல்வர் ஸ்டாலின் குறித்து கீழ்த்தரமாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சிப்பதாக கனிமொழி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தொகுதி பெறுகிறது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு உள்ளனர்.
திமுகவை பொருத்தவரை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட அனைத்துக் கட்சி பிரமுகர்களும் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்தந்த தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நாமக்கல்லில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தது திமுகவினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் கொரோனாவில் போயிருப்பார் என்று பேசி இருந்தது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் திமுகவினர் கொந்தளித்துள்ளனர். இந்த நிலையில்
இதையும் படிங்க: “கேவலமான ஆட்சி”..! மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் ஸ்டாலின் தான்..! விளாசிய EPS..!
முதலமைச்சர் பற்றி தரம் தாழ்ந்து பேசும் அளவிற்கு இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் கனிமொழி குற்றம் சாட்டினார். தமிழகத்திற்கு துரோகம் செய்பவர் எடப்பாடி என்றும் துரோகம் செய்பவர்களோடு இணக்கம் காட்டிக் கொண்டிருப்பவர் இபிஎஸ் எனவும் குற்றம் சாட்டினார். எதுவும் தேறாது என்று உணர்ந்து அவர் இது போன்ற கொச்சையான பேச்சை நிகழ்த்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எவ்ளோ வாய் கொழுப்பு இருக்கும்..? முதல்வர் குறித்த பேச்சு... இபிஎஸ்-ஐ பந்தாடிய ஆர்.எஸ். பாரதி..!!