சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!
'காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, 'டெஸ்க் ஜாப்' போல், முதல்வர் பணியை விஜய் பார்க்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: திருத்துறைப்பூண்டியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக வெற்றிக் கழகம் ஒன்றிய செயலர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் விஜயின் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “திருத்துறைப்பூண்டியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. ஒன்றிய செயலர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, தன் கட்சி நிர்வாகிகளிடமிருந்தே மக்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டெஸ்க் ஜாப் போல் முதல்வர் பணியைப் பார்க்கும் விஜய், அந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஏதாவது நடவடிக்கை எடுக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார். உள்துறைப் பொறுப்பை வேறு அமைச்சரிடம் ஒப்படைக்கும் யோசனையில் முதல்வர் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!
இதேவேளையில், பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “திருவாரூர் பஸ் நிலையத்தில் 27 வயது பெண்ணிடம் த.வெ.க. ஒன்றிய செயலர் ஆனந்தும், அவரது நண்பர் அசோக்கும் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மேடையில் பெண் உரிமை பேசும் முதல்வர் விஜய், தன் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்களை மதிக்கும் அடிப்படை ஒழுக்கத்தையாவது கற்றுத்தர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த கவலையை அதிகரித்துள்ளது. ஆளும் கட்சி நிர்வாகி மீதான இத்தகைய குற்றச்சாட்டு, புதிய அரசின் ஆரம்ப காலத்திலேயே பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி முதல்வர் விஜய் மற்றும் த.வெ.க. அரசுக்கு எதிராக தீவிரமாக விமர்சனம் செய்து வருகின்றன.
முதல்வர் அலுவலகம் இதுவரை இந்த விவகாரத்தில் விரிவான விளக்கம் அளிக்கவில்லை. இருப்பினும், கைது செய்யப்பட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வலை வீசி பிடிக்கும் எடப்பாடி! தக்க வைக்க போராடும் வேலுமணி, சண்முகம் தரப்பு!