×
 

40 எம்.எல்.ஏ-க்கள் ஒன்றிணைப்பு! இபிஎஸ் பலம் அதிகரிப்பு! முரண்டு பிடிக்கும் சி.வி.சண்முகம்!

எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் இபிஎஸ்சை சந்தித்து ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், அருண்மொழிதேவன் ஆகிய 3 எம்எல்ஏக்கள் இபிஎஸ் வீட்டுக்கு வரவில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக அதிமுகவில் நீடித்து வந்த கடும் உள்கட்சி குழப்பத்திற்கு தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். இதன் மூலம் இபிஎஸ் அணியின் பலம் 40 ஆக உயர்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக தொடர் தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி அணிகள் எதிர்ப்பு கிளப்பியிருந்தன. சட்டசபையில் நடைபெற்ற முக்கிய ஓட்டெடுப்பில் விஜய் அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் அணி வாக்களித்தது. அதே நேரத்தில் இபிஎஸ் அணி எதிராக வாக்களித்ததால், அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது.

ஆரம்பத்தில் சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ.க்களும், இபிஎஸ் அணியில் 22 எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். விஜய் அமைச்சரவையில் முக்கிய பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்த வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்புக்கு ஏமாற்றமே கிடைத்தது. அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்படாததால், அந்த அணியில் அதிருப்தி அதிகரித்தது.

இதையும் படிங்க: Breaking! அதிமுகவில் சமாதானம்! இணைந்தது இரு அணிகள்?! இபிஎஸ் வீட்டிற்கு எஸ்.பி வேலுமணி தரப்பு வருகை!

இதையடுத்து அடுத்தடுத்து ஆறு எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ் அணிக்கு திரும்பினர். மேலும் நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் சி.வி.சண்முகம் அணியின் பலம் 15 ஆக குறைந்தது.

இந்த நிலையில், சமாதான பேச்சுவார்த்தைக்காக வேலுமணி முன்வந்தார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இபிஎஸ் தலைமையை ஏற்று ஒன்றுபட்டு செயல்படுவது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பசுமைவழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு சென்றனர். அங்கு இபிஎஸ்க்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மற்றும் அருண்மொழிதேவன் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை. அவர்கள் விரைவில் சபாநாயகர் பிரபாகரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதையும் படிங்க: விரைவில் அதிமுக அணிகளை இணைக்க தூது! சமாதான பேச்சில் தீவிரம் காட்டும் இபிஎஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share