“இதுதான் நமக்கான கடைசி சான்ஸ்...” - கோவை திமுக நிர்வாகிகளுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட செந்தில் பாலாஜி ...!
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் தகுதியானவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என திமுக தலைமை அனைத்து தரப்பு நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் நேற்று வெளியிட்டார். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 25,74,608 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திறுத்தப்பணிக்கு முன் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 32,25,298 என இருந்தது. இதன்படி இறப்பு, இடமாற்றம், கண்டறியப்படவில்லை என பல்வேறு காரணங்களால் சுமார் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் கோவை மாவட்டத்தில் மட்டும் 20.17 சதவீத வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கோவை தெற்கு தொகுதியில் 26.98 சதவீதம், சிங்காநல்லூர் தொகுதியில் 25.47 சதவீதம், கவுண்டம்பாளையம் தொகுதியில் 24.71 சதவீதம், தொண்டாமுத்தூர் தொகுதியில் 21.87 சதவீதம், கிணத்துக்கடவு தொகுதியில் 20.51 சதவீதம், வால்பாறையில் 15.06 சதவீதம், பொள்ளாச்சி தொகுதியில் 14.33 சதவீதம், மேட்டுப்பாளையம் தொகுதியில் 13.99 சதவீதம், சூலூரில் 13.38 சதவீதம் என வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் தகுதியானவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என திமுக தலைமை அனைத்து தரப்பு நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்தில் பேசிய அவர், நேற்று எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் . கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் அந்த அந்த பூத் வரைவு வாக்காளர் பட்டியல் சரியாக இருக்கிறதா என சரி பார்க்க வேண்டும். விடுபட்டு இருந்தால் உடனடியாக சரி பார்க்க வேண்டும். இது இறுதி வாய்ப்பு நமக்கு என கூறிய செந்தில் பாலாஜி, அனைத்து பூத்துக்களிலும் சரி பார்க்க வேண்டும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்" - கோவையில் போஸ்டர் ஒட்டி திமுகவினர் கொக்கரிப்பு...!
மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடை பெற உள்ளது. மகளிர் மாநாடு 39 சட்ட மன்ற தொகுதி இருந்து கலந்து கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாநாட்டில் 1.50 ஆயிரம் கலந்து கொள்வார்கள். இன்னும் 9 நாட்கள் உள்ளது. 50 ஆயிரம் மகளிர் கோவையில் இருந்து கலந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசாங்கம், ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக நிர்வாகிகள் பூத் பிரமுகர்கள் வீடு தோரும் சென்று பொது மக்கள் இடம் அரசு திட்டம் குறித்து எடுத்து சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொத்து கொத்தாய் வாக்காளர்கள் நீக்கம்... நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதியிலேயே ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்...!