×
 

பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கக்கூடாது! திமுக மாஸ்டர் ப்ளான்! நாகேந்திரன், வானதியை தோற்கடிக்க ஸ்டாலின் செக்!

நான்கு ‘சிட்டிங்’ தொகுதிகள் உட்பட பாஜ போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும், அக்கட்சியை தோற்கடிக்க திமுக தேர்தல் வியூகம் அமைத்துள்ளதாம்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் (நாகர்கோயில், திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி) வென்றது. 

இப்போது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள பாஜக, 40 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆளும் திமுக இதை ஏற்க மறுத்து, பாஜகவை எல்லா தொகுதிகளிலும் தோற்கடிக்க கடும் வியூகம் அமைத்துள்ளது.

மத்திய பாஜக அரசின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள், திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளால் கடும் அதிருப்தியில் உள்ள திமுக தலைமை, இதற்கு பழிவாங்கும் வகையில் பாஜக ஒரு இடத்திலும் வெல்லக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: திமுக எதிராக வந்த சர்வே!! முதல்வர் ஸ்டாலின் திக்! திக்!! ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை இதுக்குதானா? வெளியான திடுக்!

இதன் மூலம் தேசிய அளவில் பாஜக செல்வாக்கை சரிக்கச் செய்து, திமுகவின் பலத்தை காட்ட வேண்டும் என்பது அவர்களின் திட்டம். பாஜக போட்டியிடும் தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கி, சாதி அரசியலை சாதகமாக்க திட்டமிட்டுள்ளது.

உதாரணமாக, திருநெல்வேலியில் பிள்ளைமார் சமூக ஓட்டுகள் அதிகம் என்பதால், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு எதிராக பிள்ளைமார் சமூகத்தினரை வேட்பாளராக நிறுத்த திட்டம்.

கோவை தெற்கில் திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, நாகர்கோயிலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மொடக்குறிச்சியில் பேரூர் ஒன்றிய செயலாளர் சரவணன் போன்ற பலமான வேட்பாளர்களை களமிறக்க தேர்தல் வியூக நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதனிடையே, திமுகவின் திட்டத்தை உணர்ந்த பாஜக, அதை முறியடிக்க அதிக இடங்களில் வெல்ல தீவிரம் காட்டுகிறது. அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சில தொகுதிகளின் தேர்தல் பொறுப்புகளை தந்தையின் உடல்நலம் காரணமாக விட்டுள்ளார். காங்கிரஸ்-திமுக இடையே பவர் ஷேரிங் விவாதம் நடக்கிறது, அதிமுக 5 முக்கிய உறுதிமொழிகளை அறிவித்துள்ளது. விஜய்யின் டிவிகே புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. 

இதையும் படிங்க: 12 தொகுதி பைனல் பண்ணிக்கலாம்!! திமுகவுக்கு மதிமுக செக்!! லிஸ்டை கொடுத்து பேச்சை ஆரம்பிக்கும் வைகோ!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share