×
 

முதல்வர் மு.க.ஸ்டாலினை திக்குமுக்காட வைத்த ரேவந்த் ரெட்டி... அரங்கை அதிரவைத்த அதிரடி அறிவிப்பு...!

தமிழ்நாட்டை போலவே தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். 

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” விழா சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தமிழ்நாட்டின் கல்வித் திட்டங்களை பாராட்டி, “அடுத்த ஆண்டு முதல் தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்படும்” என அறிவித்தார்.

விழாவின் தொடக்கத்தில், தமிழக அரசு கல்விக்காக செய்த சாதனைகள் குறித்த வீடியோ ஒளிபரப்பானது. பின்னர், காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறும் பள்ளி மாணவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். “எங்களுக்கு சோறு போடும் ஸ்டாலின் அப்பாவுக்கு நன்றி” என குழந்தைகள் கூறியதும், பெற்றோர்களும் “இனி எங்கள் குழந்தைகள் பட்டினியாக பள்ளிக்கு செல்ல மாட்டார்கள்” என நன்றியுரை தெரிவித்ததும், அரங்கமே கைதட்டலால் முழங்கியது.

பின்னர் உரையாற்றிய ரேவந்த் ரெட்டி, “இந்த விழாவில் பேச வாய்ப்பு தந்த ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் நன்றி. தமிழகம் கல்வித் தந்தை காமராஜரின் மண். இன்று நடைபெறும் இந்நிகழ்ச்சி தமிழக இளைஞர்களுக்கு ஊக்கமாகும்; இந்தியாவே இப்படியான திட்டங்களை பின்பற்ற வேண்டும். காலை உணவு திட்டம் இதயத்தை தொடும் ஒன்று; அதனை தெலங்கானாவில் விரைவில் செயல்படுத்த உள்ளோம்” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அரங்கம் அதிர... "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சி கோலாகல தொடக்கம்...!

மேலும் அவர், “நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களால் தமிழர்கள் அதிர்ஷ்டசாலிகள். தமிழர்–தெலுங்கர் இடையே வரலாற்று நட்பு உள்ளது. தெலங்கானாவிலும் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 1.10 லட்சம் பொறியாளர்கள் பட்டம் பெறுகிறார்கள். ஆனால் வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அதற்காகவே ‘யங் இந்தியா’ திட்டத்தை எங்கள் அரசு கொண்டு வந்துள்ளது” எனவும் கூறினார்.

இதையும் படிங்க: 8 வயது சிறுவனுக்கு காப்பகத்தில் நடந்த கொடூரம்... சாட்டையைச் சுழற்றிய காவல்துறை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share