×
 

வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

இந்திய தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் ஊழல் என்றால் அது எஸ்.ஐ.ஆர் தான்

எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் மட்டுமே எஸ்.ஐ.ஆர் உள்ளது - இந்திய தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் ஊழல் என்றால் அது எஸ்.ஐ.ஆர் தான் - லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான பாஜகவின் முயற்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது - காங்கிரஸ் கட்சிக்கு இந்த ஆண்டு திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்போம் - வேடசந்தூரில் கரூர் எம்பி ஜோதிமணி .

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தேர்தலை சந்திக்கின்ற தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆளுகின்ற நான்கு மாநிலங்களில் மட்டும்தான் எஸ்.ஐ.ஆர் உள்ளது. ஆனால் பாரதி ஜனதா கட்சி ஆளுகின்ற அசாம் மாநிலத்தில் எஸ்.ஆர் மட்டும்தான் உள்ளது.

அசாமில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்கல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருக்கின்ற வாக்காளர்கள் நீக்குகின்றனர். ஆறரை கோடி மக்களுக்கு எப்படி வெறும் 30 நாட்களில் படிவங்களை வழங்கி அதைப் பெற்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஐந்து நாட்களுக்குள் வரை வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது. 

இதையும் படிங்க: #BREAKING ஆக்கிரமிப்புகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு... ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது வழக்கு...!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பொறுத்தவரை வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது இது குடியுரிமை திருத்தம் என்.ஆர்.சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் தேர்தல் ஆணையரும் உறுதி செய்துள்ளார். ஏன் அசாம் மாநிலத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் கொண்டு வரவில்லை என்று கேட்டால் அங்கு குடியுரிமை முறையாக இல்லை என்று கூறுகிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு என்.ஆர்.சி செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது.

இது சட்டவிரோதமான தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான பாஜகவின் முயற்சிக்கு தான் தேர்தல் ஆணையம் துணை நிற்கிறது. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

 

தமிழ்நாடு மற்றும் கேரளா அரசாங்கம் தொடரப்பட்ட வழக்கு வருகின்ற 26 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். 

 

எஸ் ஐ ஆர் என்பது தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நியாயமான தேர்தலை நடத்த விடாமல் பாஜக செய்கின்ற முயற்சிதான். 

 

தமிழ்நாட்டில் தற்போது வரை 10% படிவங்கள் மட்டுமே நிறைவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒன்பது நாட்களுக்குள் எப்படி 90% படிவங்களை மக்களிடமிருந்து பெற்று எப்படி ஆன்லைனில் பதிவு செய்ய முடியும் என்பது சாத்தியமே கிடையாது. 

 

இந்திய சுதந்திர வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் ஊழல் என்றால் இப்ப நடந்து கொண்டிருப்பது தான். 

நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக பேசவில்லை. எங்களுடைய நிலைப்பாடு திமுக கூட்டணியில் இருக்கின்றோம். இந்தக் கூட்டணி ரொம்ப ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெற்றி கூட்டணியாக உள்ளது. கூட்டணியை பற்றி பேசுவதற்கான தேவை தற்போது வரை எழவில்லை. 

2010 ஆம் ஆண்டு தவெக விஜய் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். ஆனால் அதற்காக இது ஒரு கூட்டணி என்று ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. 

காங்கிரஸ் இந்த ஆண்டு திமுக கூட்டணியில் அதிக வேட்பாளர்களுக்கான தொகுதிகளை கேட்போம் அதற்காக ஒரு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரிடம் பேசி நல்ல முடிவை எடுப்பார்கள் என பேசினார்.

இதையும் படிங்க: “தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி” - பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த கரூர் எம்.பி. ஜோதிமணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share