வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

#BREAKING: செந்தில் பாலாஜி தான் காரணம்… LETTER எழுதி வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட தவெக நிர்வாகி…!

கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி தமிழக வெற்றி கழக நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சமும், விஜய் தரப்பில் 20 லட்சமும், மத்திய அரசு தரப்பில் 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அப்பாவையே அசிங்கப்படுத்துவாரு… அவர என்னத்த சொல்ல? அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி…!

கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், திமுகவின் செந்தில் பாலாஜி தான் காரணம் என லெட்டர் எழுதி வைத்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மயிலம் தொகுதியின் கிளைக் கழக செயலாளர் ஐயப்பன் தற்கொலை செய்து கொண்டார். கரூருக்கு விஜய் வருகையின் போது போதிய பாதுகாப்பு இல்லை என்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் நன்றாக வேலை செய்ததாகவும் செந்தில் பாலாஜி நூதன முறையில் நெருக்கடி கொடுத்ததாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போலீசும் இதற்கு உடந்தை என்றும் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உங்க வீடியோ தான் ஸ்டாலின் DOUBT- ஆ இருக்கு… சிபிஐ விசாரணை வேண்டும்… பந்தாடிய இபிஎஸ்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी