சாலையில் துண்டு துண்டாய் கிடந்த உடல்கள்... இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோரம்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி...!
வேப்பனஹள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 7 வயது பள்ளி மாணவன் உட்பட 3 பேர் பலி - பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது நடந்த கோர சம்பவம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த எகதடம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் கல் ஏற்றி கொண்ட வந்த லாரி மோதியதில் பள்ளி குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்கான் கவுஸ் சேக் (28) என்பவர், கிருஷ்ணகிரி மேல்சோமார் பேட்டை பகுதியில் வசித்து கொண்டு வேப்பனஹள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதேப்பள்ளியில் அவரின் 7 வயது மகன் பர்கான் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரும் அதேப்பள்ளியில் பணியாற்றும் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த சுதராணி (40). சமுக அறிவியல் ஆசிரியர் மூவரும் ஒரே வாகனத்தில் மாலை பள்ளி முடிந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!
அப்போது எகடதம்பள்ளி அருகே பின்னே வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் மூவரும் சாலையில் விழுந்து லாரியின் சக்கரம் ஏறி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்த வந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தலைமறைவாகிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பெண் ஆசிரியர்கள் 7 வயது சிறுவன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வேப்பனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!