×
 

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது! கட்சி தாவிய நிர்வாகிகளுக்கு எதிரான அதிமுக மனு தள்ளுபடி!

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நான்கு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள பணிகளுக்கு எதிரான அதிமுக மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டது.

அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு எம்எல்ஏக்களும் சட்டசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நான்கு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வந்தது. 

இந்நிலையில், எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகரின் முடிவு தவறானது எனக் கூறி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகரின் நடவடிக்கை சட்டத்துக்கு எதிரானது என அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த நான்கு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பெருந்துறையில் பலம் இழக்கும் திராவிட கட்சிகள்! அதிமுக கோட்டை பெரிய ஓட்டை! தவெகவுக்கு வாய்ப்பு!

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ராஜினாமா ஏற்கப்பட்ட பிறகு இடைத்தேர்தல் நடத்தும் செயல்முறையைத் தடுக்க முடியாது என நீதிமன்றம் கருதியதாகத் தெரிகிறது.

இந்தத் தீர்ப்பால், அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நான்கு தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே இதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவு அந்தப் பணிகளை மேலும் விரைவுபடுத்தும் எனக் கூறப்படுகிறது.

அதிமுகவினர் இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் களத்தில் இந்த நான்கு தொகுதி இடைத்தேர்தல்கள் முக்கியத்துவம் பெறும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்தத் தேர்தல்கள் த.வெ.க., தி.மு.க., அதிமுக உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கரையும் அதிமுக! கவலைப்படும் மு.க.ஸ்டாலின்! பழனிசாமி அக்கறை காட்டவில்லை என நிர்வாகிகள் அதிருப்தி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share