×
 

பாஜக ஆட்சி அமைந்தால் அகதிகளுக்கு குடியுரிமை! மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி உறுதி!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் செயல்முறை விரைவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைந்தால், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மூலம் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துவோம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

பூர்வ பர்தமான் மாவட்டம் கத்வா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “திரிணமூல் காங்கிரஸ் அகதிகளிடையே அச்சத்தைப் பரப்பி வருகிறது. ஆனால் பாஜக ஆட்சியில் அகதிகளுக்கு உரிய குடியுரிமை உறுதி செய்யப்படும். மத்துவா மற்றும் நாமசூத்திர அகதிக் குடும்பங்கள் இந்திய அரசியலமைப்பின் பாதுகாப்பில் இருக்கின்றன. அவர்களுக்காகவே நாங்கள் CAA சட்டத்தைக் கொண்டு வந்தோம்” என்றார்.

மேலும், “பாஜக ஆட்சி அமைந்தவுடன் தகுதி வாய்ந்த அனைத்து அகதிகளுக்கும் CAA கீழ் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும். ஊடுருவியவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொள்ளுங்கள். வெளியேறும் நேரம் வந்துவிட்டது. ஊடுருவலுக்கு உதவியவர்கள் யாரும் தப்ப மாட்டார்கள்” என மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் அரசை மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!

மேற்கு வங்காளத்தில் மத்துவா சமூகம் செல்வாக்குமிக்க வாக்கு வங்கியாகக் கருதப்படுகிறது. தெற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் வாழும் இந்த சமூகத்தினருக்கு குடியுரிமை பிரச்னை தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. பிரதமரின் இந்த உறுதிமொழி அவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மமதா பானர்ஜியின் 15 ஆண்டு ஆட்சி வங்காளத்தில் அச்சச் சூழலை உருவாக்கியுள்ளதாகவும், மக்கள் இப்போது மாற்றத்தை விரும்புவதாகவும் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்காள சட்டப்பேரவைக்கு 294 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்.

பிரதமரின் இந்தப் பேச்சு, மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தில் குடியுரிமை பிரச்னையை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிருப்தியில் அண்ணாமலை?! தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்! பாஜக தேசிய தலைவர் உடைத்த உண்மை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share