×
 

"ம் என்றால் வனவாசம்; எம் என்றால் சிறைவாசம்"... விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த அட்வைஸ்...!

நமது முதல்வர் எப்பொழுதுமே வார்த்தை ஜாலங்களால் திரித்து சொல்லக்கூடியவர். சட்டமன்ற தொகுதியை கொடுத்தால் மத்திய அரசின் எந்த திட்டங்களானாலும் உங்களுக்கும் வந்து சேரும் என்ற பாணியில் தான் மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பாளர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் பரிசீலனையும் போது நேரில் வந்தார்.அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது  நாளை முதல் பிரசாரத்தை துவங்க இருக்கிறேன் என்றார். மதுரை தெற்கு தொகுதிக்கு பாஜக எம்எல்ஏ வை தேர்வு செய்தால் தான் உங்களுக்கு மெட்ரோ திட்டம் கிடைக்கும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதற்கு உறுதிமொழி எடுத்த முதல்வர் இப்படி பேசுவது சரியா என முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், நமது முதல்வர் எப்பொழுதுமே வார்த்தை ஜாலங்களால் திரித்து சொல்லக்கூடியவர். சட்டமன்ற தொகுதியை கொடுத்தால் மத்திய அரசின் எந்த திட்டங்களானாலும் உங்களுக்கும் வந்து சேரும் என்ற பாணியில் தான் மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்தார்.

மெட்ரோ திட்டத்திற்கு விரிவான தகவல் திட்ட அறிக்கை கேட்டபோது தமிழக அரசு  தவறான திட்ட  அறிக்கையை கொடுத்தது. சரியான திட்ட அறிக்கையை கூட வழங்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. கஞ்சா போதையில்தான் கவனத்தை செலுத்துகிறார்கள், நாட்டின் வளர்ச்சிக்காக கவனம் செலுத்துவதில்லை.

இதையும் படிங்க: “விஜய் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது...”- பாமக வேட்பாளர் திலகபாமா கடும் வாக்குவாதம்... பரபரப்பு காரணம்?

போதைப்பொருள் விற்றவர்கள் எல்லோரும் தற்போது ரெட் ஜெயின்ட்  மூவி மூலம் சினிமா தயாரித்து கொண்டு இருக்கிறார்கள். துபாய்க்கு ஒழிந்து ஓடியவர்கள் தற்போது ரெட் ஜெயின்ட் மூவி மூலம் சினிமா தயாரித்து கொண்டிருக்கிறார்கள். சாத்தூர் தொகுதியில் முழு கவனத்தை செலுத்த போகிறேன். சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான மக்கள் வளர்ச்சி, மருத்துவம், தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்வேன்சுதந்திர இந்தியாவில் யார் எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம், எல்லோருக்கும் உரிமை உள்ளது, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான். 

விஜய் பிரசாரத்திற்கு குறைந்த நேரம் வழங்குவதாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மதிப்பிற்குரிய விஜய் கூட்டம் நடத்தும்போது சரியான முறையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விஜய்க்கு பரப்புரை ஏற்பாடுகளை சரியாக செய்ய தெரியவில்லை.திமுக பொறுத்தவரை அடக்குமுறை ஆட்சி, "ம் என்றால் வனவாசம் எம் என்றால் சிறைவாசம்" இதுதான்  திமுகவின் அடக்குமுறை

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என முதல்வர் நினைக்கிறார். ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான போர்க்களம். ஒருமுறை திமுக மைனாரிட்டி ஆட்சி அமைத்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மைனாரிட்டி திமுக ஆட்சி என்று சொல்லி வந்தார். அதற்குப்பின் தமிழகத்தில் அது போன்ற மைனாரிட்டி ஆட்சி அமையவில்லை தமிழகத்தில் இந்த முறை தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பில்லை. பெரும்பான்மையான இடங்களில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறும். 

பாஜகவும் திமுகவும் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக மம்தா பேனர்ஜி விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு, திமுகவும் தவெகவும் எங்களுக்கு எதிராக களத்தில் உள்ளது அனைவருக்கும் தெரியும். மம்தா பானர்ஜி அர்த்தமில்லாத குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். உண்மையா என்பதை மு.க.ஸ்டாலினிடம் அவர் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார். 

இதையும் படிங்க: சொந்த விபரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு..!! நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு ஏற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share