தமிழக அரசியலில் புதிய திருப்பம்! தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
தவெக தலைவர் விஜய் முன்னைலையில், மூத்த அரசியல்வாதியும், மேடைப்பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தமிழகத்தின் மூத்த அரசியல் பேச்சாளரும், பிரபலமான மேடைப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், இன்று (டிசம்பர் 5, 2025) அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தவெக தலைவர் நடிகர் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்து, தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். நாஞ்சில் சம்பத்தின் இந்த இணைவு, தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார மற்றும் தகவல் தொடர்பு பிரிவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பொதுக்கூட்டமே நடத்துறோம்.. அனுமதி கேட்டு காவல்துறையிடம் தவெக புதிய மனு!
நாஞ்சில் சம்பத் அவர்கள் முன்னர் தி.மு.க, அ.தி.மு.க., மற்றும் ம.தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் ஆவார். அவர் தனது பேச்சாற்றலால் திறமையால் த்மிழ்க மக்களிடையே அறியப்பட்டவர். தவெக-வில் அவரது இணைவு, வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு கட்சிக்குப் புதிய பலத்தைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் விஜய் அவர்கள் நாஞ்சில் சம்பத்தை வரவேற்றபோது, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். விஜயின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கியப் பிரமுகர்களின் இணைவு தொடர்ந்து நடந்து வருவது அக்கட்சியை மேலும் பலப்படுத்துகிறது.
நாஞ்சில் சம்பத் அவர்கள் இன்று மாலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள 'Voice of Commons' அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு: கரூர் சம்பவத்தை தொடர்ந்து புதுவையிலும் ரோடு ஷோவுக்கு தடை!