×
 

#BREAKING: முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு: கரூர் சம்பவத்தை தொடர்ந்து புதுவையிலும் ரோடு ஷோவுக்கு தடை!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நிகழ்ந்த நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் புதுச்சேரியில் நடத்தத் திட்டமிட்டிருந்த 'ரோடு ஷோ'வுக்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் நடத்தத் திட்டமிட்டிருந்த 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுத்து புதுச்சேரி அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், ரோடு ஷோவுக்குப் பதிலாகப் பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், இன்று முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து அனுமதி கோரிய நிலையில், அவர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகே அனுமதி மறுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரூரில் அண்மையில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: விஜய் ரோடு ஷோ: தவெக நிர்வாகிகளுடன் முதல்வரை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்!

தமிழகத்தில் தடை இருக்கும் நிலையில், புதுச்சேரியிலும் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்ட த.வெ.க. தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு திறந்த வெளியில் பொதுக்கூட்டத்தை மட்டும் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கமாட்டோம் - சபாநாயகர் செல்வம் திட்டவட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share