×
 

அதிமுக-வுக்கு அடுத்த அதிரடி ஷாக்! புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் ராஜினாமா செய்ய முடிவு?

அதிமுகவை சேர்ந்த புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று மாலை தவெக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நிலைகுலைய வைக்கும் வகையில், நேற்று 3 எம்எல்ஏக்கள் மற்றும் இன்று காலை நெல்லை இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்பொழுது கடலூர் மாவட்டத்தின் அசைக்க முடியாத அதிமுக தூணான புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணையப் போவதாக வெளியாகி உள்ள மெகா தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு அசுர வேகத்தில் நிர்வாக நகர்வுகளை மேற்கொண்டு வரும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது உத்தியோகபூர்வ பதவிகளைத் தூக்கியெறிந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 எம்எல்ஏக்களும், இன்று காலை அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் தொகுதி மக்கள் நலனைக் காரணம் காட்டி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்திருந்தனர்.

அந்த வரிசையில் தற்பொழுது 5-ஆவது விக்கெட்டாக, அதிமுகவின் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் தனது பதவியை ராஜினாமா செய்ய முழுமையாக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் புவனகிரி தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் வென்ற இவர், கடந்த காலங்களில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்பியாகவும், மாவட்ட செயலாளராகவும் அதிமுகவின் சீனியர் விசுவாசியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

வருவாய் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தனது பேட்டியில், அம்மா விசுவாசிகள் பலரும் தெளிவான மனநிலைக்கு வந்துவிட்டனர், இன்னும் பலர் வர வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டிருந்த ஆக்‌ஷன் வியூகத்தின்படியே தற்பொழுது அருண்மொழிதேவனும் தனது ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகரிடம் வழங்கிவிட்டு, இன்று மாலை தவெக நல்லரசின் முதன்மை அமைச்சர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தவெக-வில் இணைய உள்ளார். முதலமைச்சர் விஜய் நாளை தனி விமானம் மூலம் டெல்லி பறந்து பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ள பரபரப்பான சூழலில், அருண்மொழிதேவனின் இந்த அடுத்தடுத்த அதிரடி ராஜினாமா முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு மீள முடியாத அசுர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திமுக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மை!": தவெக-வில் இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள் உடைத்த ரகசியம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share