வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
இந்தியா

தமிழகத்துக்கு நிதி கொடுக்க முடியாது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவிப்பு..!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத வரை தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (சமக்ரா சிக்‌ஷா அபியான் – எஸ்எஸ்ஏ) மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதாவது, இத்திட்டத்தில் 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. 40 சதவீத நிதிக்கு மாநில அரசு பொறுப்பேற்கிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத தமிழகம் உட்பட 3 மாநிலங்களுக்கு எஸ்எஸ்ஏ நிதியை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் நிறுத்திவிட்டது. அந்த வகையில் எஸ்எஸ்ஏ திட்டத்தின் 2023-24 கல்வியாண்டின் 4-ம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நிதியை வழங்கவில்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கிடையே வாராணசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காதது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,"தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்போது தமிழகம் மட்டும் மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல.

இதையும் படிங்க: இந்திய வரலாற்றில் இதுபோன்ற ஒரு மத்திய அரசு இருந்ததில்லை.. மோடி சர்க்காருக்கு எதிராக கொந்தளிக்கும் முதல்வர் ஸ்டாலின்.!

முதலில் கல்விக் கொள்கையை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டது. பின்னர் அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. இது அவர்களுடைய தவறு. இதில் தமிழக அரசுதான் அரசியல் செய்து வருகிறது. அவர்களுக்குத் தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை இல்லை. தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது. அதையேற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் உட்பட ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது? தேசிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. எனில் தமிழ் மொழிக்கு எதிராக தமிழக அரசு இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியாது” என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.

இதையும் படிங்க: தவிக்கும் 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்கள்: நிதிப் பற்றாக்குறையால் சம்பளம் வழங்குவதில் சிக்கல்

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी