×
 

கொங்குக்கு செங்கோட்டையன்! தென்மாவட்டங்களுக்கு ஓபிஎஸ், தினகரன்! டெல்டாவுக்கு வைத்திலிங்கம்! விஜய் மாஸ்டர் ப்ளான்!

4 மாவட்டங்களுக்கான பதவியை மட்டும் செங்கோட்டையனுக்கு கொடுத்ததன் மூலம் மற்றவர்களும் வாய்ப்பு இருக்கிறது வாருங்கள் என்றே விஜய் சொல்ல வருகிறார். இது ஒரு மறைமுக அழைப்பாகக் கூட இருக்கலாம்.

அதிமுகவின் கொங்கு கோட்டையான செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தது மட்டும் தொடக்கம்தான்… இன்னும் 4-5 முக்கிய அதிமுக தலைவர்கள் விரைவில் விஜய் படையில் சேரப்போவதாக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். “விஜய் செங்கோட்டையனுக்கு மாநில பதவி தராமல் 4 மாவட்ட பொறுப்பு மட்டும் கொடுத்ததே மற்றவர்களுக்கு மறைமுக அழைப்பு விடுக்கத்தான்” என்று அவர் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையன் அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்று OPS, டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை சந்தித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் இருந்து நீக்கினார். நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் இன்று பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். அவருக்கு மேற்கு மண்டலம் (கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல்) அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் இதோடு நிற்கப்போவதில்லை என்று தனியார் டிவி பேட்டியில் கேசி பழனிசாமி வெடிகுண்டு தகவல் தந்தார். அவர் கூறிய முக்கிய பாயிண்ட்கள்:

இதையும் படிங்க: தவெகவில் செங்கோட்டையன்! கொங்கு கோட்டை போயிருச்சே! அப்செட்டில் அமித்ஷா! ஆத்திரத்தில் இபிஎஸ்! நைனார் சமாளிப்பு!

  • “தவெகவில் முதல் முறையாக வேஷ்டி கட்டிய தலைவர் இணைந்திருக்கிறார். செங்கோட்டையனுக்கு மாநில பதவி தராமல் 4 மாவட்ட பொறுப்பு மட்டும் கொடுத்தது மற்ற அதிமுக தலைவர்களுக்கு ‘வாருங்கள், உங்களுக்கும் வாய்ப்பு உண்டு’ என்ற மறைமுக அழைப்பு தான்!”
  • “இன்னும் 4-5 முக்கியஸ்தர்கள் விஜயோடு பயணிக்க தயாராக இருக்கிறார்கள்.”
  • “தெற்கில் டிடிவி, OPS இருக்கிறார்கள்… டெல்டாவில் வைத்தியலிங்கம் போன்றோர் இருக்கிறார்கள். இப்போது மேற்கில் செங்கோட்டையன். இது அதிமுக தொண்டர்களிடையே பெரிய சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.”
  • “பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக தொண்டர்கள் ‘அடுத்து நாம்தான் ஆட்சி’ என்று உற்சாகமாக இருந்தார்கள். செங்கோட்டையன் போனதால் அந்த உற்சாகம் தூள் தூளாக உடைந்துவிட்டது.”
  • “திமுகவை வீழ்த்தி தவெக ஆட்சி பிடிக்குமா என தெரியாது… ஆனால் அதிமுக வெற்றியை தடுக்கும் பணியைத்தான் அவர்கள் செய்யப்போகிறார்கள்!”

கேசி பழனிசாமி மேலும் கவலையுடன் கூறுகையில், “செங்கோட்டையனின் முடிவு அதிமுக தொண்டர்களுக்கு வருத்தமானது, துரதிருஷ்டமானது. இதனால் கட்சி பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிபோகிறதே என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

விஜய் இப்போது அதிமுகவின் பிளவுபட்ட தலைவர்களை ஒரே கொடியின் கீழ் கொண்டு வரும் மாஸ்டர் பிளான் போடுவதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசுகின்றன. செங்கோட்டையன் தொடக்கம்… அடுத்து யார்? 2026 தேர்தலுக்கு முன் அதிமுக முற்றிலும் பிளவுபடுமா? தமிழக அரசியல் இப்போது மிகப்பெரிய திருப்பத்தை நோக்கி போகிறது!
 

இதையும் படிங்க: 8 முறை எம்.எல்.ஏ!! ‘52 ஆண்டு வெற்றியாளர்’ செங்கோட்டையன் கடந்து வந்த பாதை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share