அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!
தருமபுரி மேற்கு மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் அரங்கநாதன் உள்ளிட்ட 4 நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று அதிமுகவில் இருந்தார். இதனை தொடர்ந்து தருமபுரி மேற்கு மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் அரங்கநாதன் மற்றும் 3 நிர்வாகிகள், ஓபிஎஸ் முடிவு ஏற்காமல், தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் நகர செயலாளர் சக்தி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் முனியன் உள்ளிட்டோர் இணைந்தனர்.
புதிதாக இணைந்தவர்களுக்கு அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கட்சி துண்டினை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, அரங்கநாதன்,
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவின் தொண்டனாக இருந்து வந்த நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் என பிரியும் போது ஓபிஎஸ் அணிக்கு சென்றேன். ஆனால் தற்பொழுது ஓபிஎஸ் திமுகவுக்கு சென்றதால், தான் அந்த அணியில் இருந்து விலகி இன்று அதிமுகவில் இணைத்துள்ளேன்.
இதையும் படிங்க: எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!
மேலும் எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் போது தீய சக்தி திமுக, அண்ணாவின் கொள்கைகள் திட்டங்களை செயல்படுத்த காரணத்தினால், திமுகவை விரட்டி அடிக்க வேண்டும் என எம்ஜிஆர் இயக்கத்தை ஆரம்பித்தார். ஆனால் தற்பொழுது ஓபிஎஸ் மூன்று முறை அதிமுகவில் முதலமைச்சராக இருந்து தற்போது திமுகவில் சேர்ந்து, பெரிய துரோகம் செய்துள்ளார்.
மேலும் தங்கள் அணியிலிருந்து பலர் அதிமுகவில் இணைய உள்ளனர். மீண்டும் 2026 இல் எடப்பாடி யார் முதல்வராக நாங்கள் பாடுபடுவோம் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாங்க இருக்க வரைக்கும் தான் தேனி "கோட்டை" ... இப்ப வெறும் ஓட்டை..!! ரைமிங்கில் பேசிய ரவீந்திரநாத்..!!