×
 

பிரதமர் மோடி செல்பி வீடியோ... ஒரே நாளில் 10 லட்சம் புதிய Followers, 30.5 கோடி Views! இன்ஸ்டாகிராமில் வெடித்த வைரல்!

பிரதமர் மோடி செல்பி வீடியோ வெளியிட்டதன் எதிரொலியாக அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஒரே நாளில் 10 லட்சம் பேர் புதியதாக பின்தொடர்ந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்பி பாணி இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நேரடியாக மக்களிடம் உரையாடிய அந்த வீடியோ வெளியான 24 மணி நேரத்திற்குள் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை சுமார் 10 லட்சம் பேர் புதியதாக பின்தொடர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10.2 கோடியை எட்டியுள்ளது.

பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அந்த செல்பி வீடியோவில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை மிகவும் தீவிரமாக மத்திய அரசு அணுகி வருவதாகவும், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலைகளை அரசு முழுமையாக புரிந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த பதிவு அதிக கவனம் பெற்றதாக கூறப்படுகிறது. வெளியான தகவல்களின்படி, இந்த இன்ஸ்டாகிராம் ரீல் 30.5 கோடி (305 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. 1.7 கோடி பேர் விருப்பங்களையும், 1.6 கோடி பேர் கருத்துகளையும் பெற்று இருக்கிறது.மேலும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த பதிவுடன் ஈடுபட்டு, தங்களது கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி! கடும் சிறைத்தண்டனை, அதிக அபராதம்! வருகிறது புதிய சட்டம்!

இந்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றொரு செல்பி வீடியோவை வெளியிட்டு, இளைஞர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்களுக்கு நன்றி தெரிவித்தார். தனது முந்தைய வீடியோவுக்கு கிடைத்த ஆதரவும், பயனுள்ள ஆலோசனைகளும் மகிழ்ச்சி அளித்ததாக அவர் கூறினார். இளைஞர்களின் பங்களிப்பும் ஆக்கபூர்வமான கருத்துகளும் நாட்டின் வளர்ச்சிக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வீடியோவுக்கு கிடைத்த அபார வரவேற்பைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளைஞர்களுடன் அதிகமாக தொடர்பில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடகங்கள் மூலம் நேரடியாக மக்களை சென்றடையும் அரசின் புதிய அணுகுமுறையாக இதை அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share