இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!
பாமக வேட்பாளர் கவிஞர் ம.திலகபாமா “உங்களுக்காக வருகிறேன்... உங்களுடன் இருக்கவே வருகிறேன்...” என்ற தனது பரப்புரை பாடலை இன்று வெளியிட்டார்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கவிஞர் ம.திலகபாமா “உங்களுக்காக வருகிறேன்... உங்களுடன் இருக்கவே வருகிறேன்...” என்ற தனது பரப்புரை பாடலை இன்று வெளியிட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இதையடுத்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் தனியாக களம் காணும் நாம் தமிழர் கட்சி, புதிதாக வந்துள்ளது தமிழக வெற்றிக் கழகம் என தேர்தல் களமே பரபரப்பாக உள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்த கையோடு பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.திலகபாமா இன்று பரப்புரை மேற்கொண்டார். பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் உள்ள தென்றல் நகரில் அமைந்துள்ள கடும்பாடி அம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, தனது பரப்புரையை தொடங்கினார்.
இதையும் படிங்க: ஸ்டன் ஆன பெரம்பூர்... கையில் தராசுடன் வந்த வேட்புமனு தாக்கல் செய்த திலகபாமா... ஷாக்கிங் காரணம்...!
திறந்தவெளி வாகனத்தில் இன்று காலை 7 மணிக்கு தென்றல் நகரில் இருந்து பரப்புரையைத் தொடங்கிய திலகபாமா, துர்க்கை அவென்யூ 2வது மெயின் ரோடு, பார்வதி நகர் பேருந்து நிலையம், என்.எஸ்.கே. சாலை, காந்தி சிலை, நரசிம்ம ரெட்டி நகர் கோயில், சின்னாண்டி மடம், கட்டபொம்மன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வாக்கு சேகரிக்க சென்ற திலகபாமாவிற்கு அப்பகுதி மக்கள் ஆரத்து எடுத்தும், மலர் தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொடுங்கையூரின் சாபக்கேடான குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் முற்றிலுமாக அழிப்பேன், தரமான சாலைகள் அமைத்து தருவேன், முறையான கழிவுநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது முற்றிலும் தடுக்கப்பட்டு அனைவருக்கும் சுத்தமான குடிநீர் உறுதி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன் தொடர்ச்சியாக, ஆர்.வி.நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட திலகபாமா அங்கு தனது பரப்புரை பாடலை வெளியிட்டார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் “உங்களுக்காக வருகிறேன்... உங்கள் திலகபாமா...” என்ற பரப்புரை பாடலை வெளியிட்டார். அப்போது பாமக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் 108 தேங்காய் உடைத்தும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!