×
 

புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

பிரதமரின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்படுவேன் என புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி அளித்துள்ளார்.

மத்திய கல்வித்துறையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை அமைச்சகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததையடுத்து, பிரகலாத் ஜோஷி புதிய பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

புதிய பொறுப்பை ஏற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரகலாத் ஜோஷி, இந்த பொறுப்பை மிகுந்த தன்னடக்கத்துடனும் பொறுப்புணர்வுடனும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். மேலும், தனது மீது நம்பிக்கை வைத்து கல்வித்துறையின் கூடுதல் பொறுப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட உறுதியளித்த அவர், இந்தியாவின் கல்வித்துறை கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கூறினார். குறிப்பாக, புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு கல்வி அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வளர்ச்சி தொடர வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி செல்பி வீடியோ... ஒரே நாளில் 10 லட்சம் புதிய Followers, 30.5 கோடி Views! இன்ஸ்டாகிராமில் வெடித்த வைரல்!

மேலும், தனது மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றும், பிரதமரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் பிரகலாத் ஜோஷி கூறினார்.

அதே நேரத்தில், கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த முக்கிய பங்காற்றியதாகவும், அந்த திட்டத்தின் மூலம் இந்திய கல்வித்துறை புதிய பாதையில் முன்னேறியுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

கல்வித்துறையின் புதிய பொறுப்பை ஏற்றுள்ள பிரகலாத் ஜோஷி, ஏற்கனவே கவனித்து வரும் துறைகளுடன் இணைந்து கல்வித்துறையையும் திறம்பட வழிநடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் கல்வி தொடர்பான அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிக கவனம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி! கடும் சிறைத்தண்டனை, அதிக அபராதம்! வருகிறது புதிய சட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share