“பணம் கொடுக்காத அயோக்கியன், திருடன்...” - இபிஎஸை ஒருமையில் சாடிய புகழேந்தி... கொதிக்கும் ர.ர.க்கள்...!
கரூர் 41 பேர் உயிரிழப்பில் பணம் கொடுக்காத ஒரே கட்சி அதிமுக எடப்பாடி பழனிசாமி என ஒருமையில் கடுமையாக விளாசிய புகழேந்தி
கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பிரச்சார கூட்டங்களில் தவெக கொடிகள் தென்படுவது வாடிக்கையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் தவெக கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன், தன் கட்சி தொண்டர்களை வைத்தே தவெக கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றும், விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அதிமுக பலவீனமாகிவிட்டது என்றும் கடுமையாக விமர்சித்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். தவெக தலைவர் விஜய் கூட்டணி வருவார் என்றால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார். ஏற்கெனவே கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவை கழற்றிவிட்டார் எனக்கூறினார்.
இந்த விவகாரத்தில் அடுத்ததாக புகழேந்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அதிமுகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பெங்களூர் புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அதிமுக கூட்டங்களில் தவெக கொடி பறக்கிறது என்கிற கேள்விக்கு: எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பறந்த கொடியை கொடி பறக்கிறதா என்கிறார்.. அதிமுக பனியன் அணிந்து தவெக கொடி பிடிக்கிறார்கள்.. அமித் ஷா வந்தால் அதிமுகவினரை பாஜக கொடி பிடிக்க வைத்து, அதிமுக கொடியை படுக்க வைத்துவிட்டார்கள்.
இதையும் படிங்க: அறிவாலயம் வாட்ச்மேன் டிடிவி! இபிஎஸ் பற்றி பேச என்ன அருகதை இருக்கு? கொந்தளித்த அதிமுக
எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு யோசனை சொல்கிறேன். உங்கள் முன்னாள் அமைச்சர்களுடன் மேளதாள, நாதஸ்வரத்தை வாசித்துக்கொண்டு பனையூரில் உள்ள விஜய் வீட்டு வாசலில் விழுந்தாலாவது தவெக கூட்டணிக்கு வருமா என்பதை பார்க்கலாம் என்றார்.
கரூர் விவகாரத்தில் விசிக உள்ளிட்ட கட்சிகளும் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குகிறதே என்கிற கேள்விக்கு, ராகுல்காந்தி, காங்கிரஸ் சார்பில் நிதி அறிவிக்கிறார்.. கமல் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார், விசிக கொடுத்திருக்கிறது. தனது கட்சிகாரர்கள் உயிரிழந்தார்கள் என 20 லட்சம் அறிவித்து பணம் கொடுக்க உள்ளார்.
ஆனால் பணம் கொடுக்காத ஒரே அயோக்கியன், திருடன் எடப்பாடி பழனிசாமி மட்டுமே.. பிணத்தை வைத்து அரசியல் செய்வதாக காட்டமாக பேசியது அதிமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “தவெக கொடியை தூக்கி காட்டும் அளவுக்கு அதிமுககாரன் இழி பிறவி இல்ல” - செல்லூர் ராஜூ ஆவேசம்...!