அதிமுகவில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ஷாக்கில் இபிஎஸ்...!
அதிமுக கூட்டணியிலிருந்து புரட்சி பாரதம் கட்சி வெளியேறுகிறதா ? பூவை ஜெகன் மூர்த்தி இன்று மாலை முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மூன்று தொகுதிகள் ஒதுக்குவார்கள் என நம்பியிருந்தனர். கே.வி.குப்பம் என்ற ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியதல் பூவை ஜெகன் மூர்த்தி அதிருப்தியில் இருந்து வருகிறார். புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் ஆண்டரசன் பேட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ருசேந்திரகுமார் தலைமையில் உயர்மட்டக்குழு நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுகவிலேயே நீடிக்கலாமா? அல்லது வெளியேறலாமா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அப்படி வெளியேறினால் அடுத்ததாக திமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது தவெகவுடன் கரம் கோர்க்கலாமா? என்பது குறித்தும் ஆலோசித்துள்ளார். அப்போது திமுகவில் ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதால், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் பூவை ஜெகன் மூர்த்தி தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி அவர் கேட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அதிமுக அந்த ஒரு தொகுதியும் அளிக்கவில்லை. அதற்கு பதிலாக சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதி ஒதுக்குவதாக அதிமுக சமாதானம் செய்து வாக்குறுதி அளித்திருந்தது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்
5 தொகுதிகள் புரட்சி பாரதம் கேட்டிருந்த நிலையில் மூன்று தொகுதிகள் நம்பியிருந்த அவருக்கு ஏற்கனவே அளித்த கே.வி.குப்பம் ஒரே தொகுதியை அதிமுக கொடுத்ததால் ஜெகன் மூர்த்தி அதிருப்தியில் உள்ளார்.
இதையும் படிங்க: விட்டுறா வண்டிய பிரச்சாரத்துக்கு... போட்ட ஸ்கெட்சை பக்காவாய் முடித்த எடப்பாடி... திண்டாட்டத்தில் திமுக...!
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கே.வி. குப்பம் சட்டமன்றத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் சீதாராமன் விட 10582 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பூவை.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ ஆனார். 2006 சட்டமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் சு.ரவி விட 7556 வாக்கு வித்தியாசத்தில் ஜெகன் மூர்த்தி வெற்றி பெற்றார். 2011 திமுக கூடுதல் தொகுதி அளிக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறி புரட்சி பாரதம் கட்சி தனித்து போட்டியிட்டது.
2011 சட்டமன்றத் தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் பூவை ஜெகன் மூர்த்தி தனித்து போட்டியிட்டு 21118 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்,
பிறகு 2014 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு புரட்சி பாரதம் கட்சி போட்டியிடாமல் ஆதரவு அளித்தது. 2016 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதுராந்தகம் ஒரே தொகுதி மட்டும் ஒதுக்கியதால் கூடுதல் தொகுதி கேட்டு அளிக்காததால் அந்த தொகுதியும் விட்டுக் கொடுத்து அதிமுகவுடன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வந்த புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுக உரிய அங்கீகாரம் அளிக்காததால்
இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுமா என்பது குறித்து மாலை பூவை ஜெகன் மூர்த்தி அறிவிக்க உள்ளார்,
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்... இபிஎஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!