×
 
☰

அக்.10ல் சென்னை வரும் ராகுல்... ஸ்டாலினை சந்திக்க திடீர் முயற்சி! கார்கே போடும் புதிய கணக்கு!

இதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாகவும், திமுக தரப்புடனும் தொடர்பு கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் அக்டோபர் 10-ம் தேதி சென்னை வர உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் நேரில் சந்திக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தரப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், ராகுல்–ஸ்டாலின் சந்திப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக சென்னையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சென்னை பயணத்தின்போது ஸ்டாலினை சந்தித்து பேச வேண்டும் என்பது கார்கே தரப்பின் விருப்பமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பான விவகாரம், தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ‘இந்தியா’ கூட்டணியில் திமுகவின் எதிர்கால பங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னைக்கு படை எடுக்கும் பிரதமர் மோடி - ராகுல்காந்தி! பலத்தை காட்ட தயாராகும் பாஜக - காங்.,!

இதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாகவும், திமுக தரப்புடனும் தொடர்பு கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், ராகுல் காந்தியின் சென்னை பயணத்தில் தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யை சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் அரசியல் வட்டாரத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. ராகுல் சென்னை வருகையையொட்டி விஜய்யுடனான சந்திப்பு குறித்து ஏற்கெனவே கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் காங்கிரஸ் தற்போது தவெக தலைமையிலான அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், திமுகவுடனான தேசிய அளவிலான அரசியல் ஒருங்கிணைப்பு குறித்த விவாதமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் ராகுலின் சென்னை பயணம் மாணவர் நிகழ்ச்சியைத் தாண்டி அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

எனினும், ஸ்டாலினை ராகுல் சந்திப்பாரா அல்லது விஜய்யை சந்திப்பாரா என்பது குறித்து காங்கிரஸ் தரப்பில் இதுவரை இறுதி அறிவிப்பு வெளியாகவில்லை. அக்டோபர் 10-ம் தேதிக்கு நெருங்கும் நிலையில், இந்த சந்திப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share