×
 

வேட்பாளர் தேர்வில் களம் இறங்கும் ராகுல்காந்தி! 28 சீட்டு யாருக்கு? கலக்கத்தில் காங்கிரசார்!

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு கிறிஸ்டோபர் மாணிக்கத்தை தேர்வு செய்ததுபோல, சட்டசபை தேர்தலிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளதால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் மீண்டும் ராகுல் காந்தி நேரடி தலையீடு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மாணிக்கம் தேர்வு செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கபாலு, திருநாவுக்கரசர், செல்லக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் முயன்ற நிலையில், கட்சியில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத கிறிஸ்டோபரை ராகுல் தேர்ந்தெடுத்தார். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற ராகுலின் கொள்கையால் இது நடந்ததாக கூறப்படுகிறது.

இதே போன்று, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளுக்கும் ராகுல் நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக உள்ள 17 பேருக்கு மட்டுமின்றி, பல மூத்த தலைவர்களும் தங்கள் தொகுதிகளை தக்கவைக்கவோ அல்லது புதிய தொகுதிகளை கேட்கவோ முயன்று வருகின்றனர். 

இதையும் படிங்க: பார்லிக்கு வர சொன்னா பாரீன் ஓடுறீங்களே? அப்புறம் எப்பிடி பேசுவீங்க! ராகுல்காந்தியை வச்சு செய்த அமித்ஷா!

ஆனால் ராகுல் இம்முறையும் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளார் என்று டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு டில்லி காங்கிரஸ் நிர்வாகி கூறுகையில், “ராகுல் எளிய சமூக, பொருளாதார பின்னணி கொண்டவர்கள், களப்பணியில் திறன் கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்த விரும்புகிறார். 2024 லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை தொகுதிக்கு திருநாவுக்கரசர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் முயன்றபோது, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியான சுதாவை நிறுத்தினார். 

அதுபோலவே 28 தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வு இருக்கும். எனவே, ராஜ்யசபா தேர்வு போலவே சட்டசபை வேட்பாளர் பட்டியலும் அதிர்ச்சி தரும் வகையில் இருக்கும்” என்றார்.

இந்த முடிவு தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு எப்படி அமையும் என்பது இப்போதே பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க: நாட்டின் நலனில் மோடி சமரசம்?! பார்லி.,யில் அனல் பறக்கும் விவாதம்!! ராகுல்காந்திக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share