×
 

மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

மாநிலங்​களவை​யில் காலி​யாக உள்ள 27 இடங்​களுக்கு வரும் 18-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் மத்​திய பிரதேசத்​தில் 3 இடங்​களுக்கு தேர்​தல் நடை​பெறுகிறது.

மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

மாநிலங்களவையில் காலியாக உள்ள 27 இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் மூன்று இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில், ஒரு வேட்பாளர் வெற்றி பெற 58 வாக்குகள் தேவைப்படுகிறது. தற்போது பாஜகவிடம் 164 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸிடம் 64 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பாஜக இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் எளிதாக வெற்றி பெறும் சூழல் இருந்தது. பாஜக சார்பில் தருண் சக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் மகேஷ் கெவத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பாஜகவிடம் கூடுதலாக உள்ள வாக்குகளை கருத்தில் கொண்டு மூன்றாவது வேட்பாளரையும் அக்கட்சி களமிறக்கியது.

இதையும் படிங்க: இது அதிக பிரசங்கித்தனம்! எங்களை யாரும் கேட்கல! பிரவீன் சக்ரவர்த்திக்கு சிபிஎம் கண்டனம்! கூட்டணி பெயரால் சர்ச்சை!

இதற்கிடையில், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு எதிராக ஐதராபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் ஒரு வழக்கு தொடர்பான விவரத்தை மனுவில் குறிப்பிடவில்லை என்ற காரணத்தால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் உள்ள மூன்று இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது திட்டமிட்ட நடவடிக்கை என்றும், பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காகவே அதிகாரிகள் செயல்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்பாக உருவாகியுள்ள இந்த சர்ச்சை, மத்திய பிரதேச அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளதுடன், தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: தவெக + காங்கிரஸ் கூட்டணி பெயர் வச்சாச்சு?! முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share