×
 

#BREAKING: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு; உதயசூரியன், இரட்டை இலையால் அங்கீகாரத்தை இழந்த கட்சிகள்..!

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளுக்குள் ஏதாவது ஒரு தேர்தலில் பங்கேற்காத பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் அரசியல் களம், ஏராளமான கட்சிகளின் இருப்பால் ஏற்கனவே சிக்கலானதாக இருந்தாலும், அவற்றில் பலவற்றின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் எடுத்த கடுமையான நடவடிக்கை, அரசியல் கட்சிகளின் தரத்தை உயர்த்தும் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளுக்குள் ஏதாவது ஒரு தேர்தலில் பங்கேற்காத பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்த ஆய்வின் முதல் கட்டமாக, தேர்தல் ஆணையம் 334 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்தது. இதன் மூலம், மொத்த பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,854-ஆம் 2,520 ஆகக் குறைந்தது. இது மட்டுமல்லாமல், இந்தியாவில் 476 கட்சிகளை நீக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது. இதில், 30 மாநிலங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலை வெளியிட்டது. இந்தக் கட்சிகள் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல்களில் பங்கேற்கவில்லை என்பதுடன், அவற்றின் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் சென்று ஆய்வு செய்தபோது, அவை செயல்படாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நாடு முழுவதும் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் செலவுகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது. குறிப்பாக அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்த சில சிறிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: முகத்தை துடைத்தது ஒரு குத்தமா?... திமுகவை வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி...!

கடந்த 3 தேர்தல்களில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மூன்று முறையும் அக்கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்கள் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்களாக கருதப்படவில்லை. இதேபோல் ஜான்பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜான்பாண்டியன் தொடர்ந்து அதிமுக, பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்து வந்தார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஜான் பாண்டியன் போட்டியிட்டார். 2021ம் நடந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தொடர்ந்து மாற்றுக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வந்ததால் கட்சி பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

2016 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவையும் ரத்து செய்தது தேர்தல் ஆணையம். 2019, 2021, 2024 தேர்தல்களில் தமிமுன் அன்சாரியின் கட்சி போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: ரூட்டை மாற்றிய விஜய்... தவெக சுற்றுப்பயண திட்டத்தில் அதிரடி மாற்றம் - வெளியானது முக்கிய தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share