முஸ்லிம்களும் சூர்ய நமஸ்காரம் செய்யலாம்! என்ன தப்பாகிற போகுது! ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர் பேச்சு!
“சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நலனுக்காக ஆறுகள், மரங்கள் மற்றும் சூரியனுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் முஸ்லிம்கள் எதையும் இழக்க மாட்டார்கள்,” என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள சந்த் கபீர் நகரில் டிசம்பர் 17 அன்று நடைபெற்ற இந்து சம்மேளனத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபலே பங்கேற்று உரையாற்றினார்.
அவரது உரையில் இந்திய கலாசாரத்தின் உலகளாவிய ஈர்ப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து பேசிய அவர், முஸ்லிம்களும் சுற்றுச்சூழல் நலனுக்காக ஆறுகள், மரங்கள் மற்றும் சூரியனுக்கு மரியாதை செலுத்தலாம் என்று தெரிவித்தார்.
தத்தாத்ரேய ஹோசபலே பேசியதாவது: நம் நாட்டு மக்களின் புத்திசாலித்தனம், திறமை மற்றும் கடின உழைப்பு உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. இந்திய கலாசாரத்தை அறிய பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பதியில் உச்சக்கட்ட ஊழல்... ரூ.3000 கோடி அம்பேல்... ஏழுமலையான் சொத்தில் கைவைத்த சந்திரபாபு நாயுடு...!
ரஷ்யாவில் தேவாலயங்களை கோவில்களாக மாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்துக்கள் வாழும் இடங்களில் கோவில்கள் கட்டப்படுகின்றன. அங்கு மக்கள் சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணாயாமம் செய்கின்றனர். சமஸ்கிருதம் கற்கின்றனர்.
ஜெர்மனியில் பல பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் போதிக்கப்படுகிறது. அனைவரின் மதங்கள் மற்றும் கலாசாரங்களையும் மதிக்கும் இந்தியா, கலாசாரம் மற்றும் அறிவில் உலகத் தலைமையைப் பெற வேண்டும். இந்து மதம், இந்துத்துவா மற்றும் இந்து கலாசாரத்தில் உள்ள சிறந்த அம்சங்களை வாழ்வில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக முஸ்லிம்களும் ஆறுகள், மரங்கள் மற்றும் சூரியனுக்கு மரியாதை செலுத்தலாம். அதனால் அவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள். நமது முஸ்லிம் சகோதரர்கள் சூரிய நமஸ்காரம் செய்தால் என்ன தீங்கு நேரிடப் போகிறது? அது மசூதிக்குச் செல்வதைத் தடுக்காது. சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணாயாமம் உடல் நலம் சார்ந்த அறிவியல் நடைமுறைகள். எந்த மதத்தையும் பின்பற்றலாம், ஆனால் மனித மதத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இயற்கை வழிபாடு மத எல்லைகளைத் தாண்டியது என்றும், இந்திய மரபுகள் இயற்கை பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் ஹோசபலே வலியுறுத்தினார். இந்த உரை சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விஜய் கட்சியில் கருப்பு ஆடு? ஈரோடு ஸ்பீச் முன்கூட்டியே வெளியானது எப்படி?