ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?
தவெக பிரமுகர் , வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மிரட்டி, புறம்போக்கு நிலத்தில் இருந்து மண் மற்றும் கற்களை வெட்டி பல கோடிக்கு விற்பனை செய்து வருவதாகவும் குற்றசாட்டு
சேலம் அருகே சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தவெக பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் வட்டாச்சியார் அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு
சேலம் அருகே சன்னியாசிகுண்டு ஊராட்சியில் மூலக்காடு பகுதியில் உள்ள சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தையும், அங்குள்ள அரசுக்கு சொந்தமான அமிர்த குளத்தையும் ஆக்கிரமித்து வைத்துள்ள தவெக பிரமுகரான ஓவியா ஜுவல்லரி உரிமையாளர் சண்முகவேல் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தியும், இதேபோன்று பனமரத்துப்பட்டி பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள முன்னாள் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் தாலுக்கா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் இன்று காலை முதல் நடபெற்று வருகிறது.
சேலம் தாலுக்கா அலுவலகத்திற்குள் நுழைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக உறுப்பினர் மோகன் தலைமையில் சுமார் 100 பேர், அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து , தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!
போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர், சேலம் மாவட்டத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும் செயல் தற்போது அதிகரித்து வருவதாகவும், இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மோகன், கூறும்போது , ஆளுங்கட்சி பிரமுகரான சண்முகவேல் என்பவர் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி சன்னியாசிகுண்டு பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டினர்.
அதுமட்டுமல்லாமல் அரசு நிலத்திலிருந்து கல் மண் போன்றவற்றை வெட்டி எடுத்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும், இதுகுறித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கச் செல்லும் அரசு அதிகாரிகளை குறிப்பாக தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை தொலைபேசியில் மிரட்டுவதாகவும், ஆளுங்கட்சி என்ற பெயரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதிகாரிகளை மிரட்டும் சண்முகவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!