சசிகலாவின் அரசியல் ரீ எண்ட்ரி! பசும்பொன்னில் பக்கா ப்ளான்!! களமிறங்கும் மெகா டீம்!! சூடுபிடிக்கும் அரசியல் களம்!
தென் மாவட்ட அரசியலில் சசிகலாவின் மூவ்மென்ட்டுகள் எடப்பாடி தரப்புக்குச் செம டஃப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன.
தமிழக 2026 சட்டசபை தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்ட அரசியலில் சசிகலாவின் நகர்வுகள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. வரும் பிப்ரவரி 24-ம் தேதி பசும்பொன்னில் சசிகலா நடத்தவிருக்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம், அவரது அரசியல் ரீ-என்ட்ரிக்கான மெகா ஷோவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை ஏனோ தானோ என்று நடத்த சசிகலா விரும்பவில்லை. "குறைந்தபட்சம் 25,000 பேராவது திரண்டு வர வேண்டும்" என ஆதரவாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுள்ளார். இதற்காக ஏராளமான தொகை செலவு செய்யப்பட்டு, கிரவுண்ட் வேலைகள் படுஜோராக நடக்கின்றன. கூட்டம் தேர்தலுக்கான அடித்தளமாக அமைய வேண்டும் என்பதில் அவர் குறியாக உள்ளார்.
கள வேலைகள், நிர்வாகிகள் தேர்வு ஆகியவற்றை புரொபஷனலாக கையாள 10 பேர் கொண்ட சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சோ. ஐயர் நிர்வாக வியூகங்கள் வகுக்கிறார். முன்னாள் போலீஸ் அதிகாரி வெள்ளைத்துரை கள ரியாலிட்டி ஆராய்ந்து ஸ்கெட்ச் போடுகிறார். இந்த 'வார் ரூம்' போன்ற டீம் இனி சசிகலாவின் அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: சசிகலா - ஓபிஎஸ் இணைந்தால் யாருக்கு நஷ்டம்? டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி தரப்பு நடுக்கம்!
தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் பழைய யூனியன் லெவல் நிர்வாகிகளை தட்டி எழுப்பும் வேலை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க 'மாஜி' நிர்வாகி பி.இ.எல் மஜி மறைமுகமாக களத்தில் இறங்கியுள்ளார். இதனால் முக்குலத்தோர் சமூகத்தில் சசிகலாவின் செல்வாக்கு மளமளவென உயர்ந்து வருகிறது.
அ.தி.மு.க-வின் பாரம்பரிய பலம் முக்குலத்தோர் வாக்கு வங்கிதான். ஆனால் எடப்பாடி தலைமைக்கு வந்தபிறகு தென் மாவட்ட முக்குலத்தோரிடம் அதிருப்தி நிலவுகிறது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இணைந்தால் அ.தி.மு.க-வின் இந்த வாக்கு வங்கியை தங்கள் பக்கம் இழுக்க சசிகலா திட்டமிட்டுள்ளார்.
பசும்பொன் கூட்டத்தில் பலத்தை நிரூபித்து அ.தி.மு.க அடிமட்ட தொண்டர்களை இழுக்க சசிகலா ஸ்கெட்ச் போட்டுள்ளார். "தலைமையில் எங்கள் சமூகத்துக்கு இடமில்லையா?" என்ற கேள்வியை முன்வைத்து தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வை பிரிக்க முயல்கிறார். கொங்கு மண்டலத்துக்கு எதிராக தென் மண்டலம் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்.
இந்த நகர்வு எடப்பாடிக்கு பெரும் பிரஷராக அமையும். முக்குலத்தோர் ஓட்டுகள் சிதறினால் அ.தி.மு.க-வுக்கு தென் மாவட்டங்களில் பெரும் இழப்பு. சசிகலாவின் இந்த மெகா ஷோ எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: டிடிவி, எடப்பாடியை வீழ்த்த வியூகம்!? விஜயுடன் கைகோர்க்கும் சசிகலா! தென் தமிழகத்தில் பலம் சேர்க்கும் கூட்டணி!