சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதி பக்கம்தான் தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் பங்கீடு, தொகுதி நிலவரங்கள் உச்சக்கட்டத்தில் உள்ளன. அதிமுக, திமுக, தவெக, பாமக உள்ளிட்ட கட்சிகளிடையே பரபரப்பும் சலசலப்பும் நிலவுகிறது. ஆனால், இந்த அரசியல் குழப்பங்களுக்கு நடுவே ஒருவர் மட்டும் குளிர்காய்ந்து நிற்கிறார் – அவர் தான் நாம் தமிழர் கட்சி (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
"சிங்கம் எப்போதும் சிங்கிளாகத்தான் வரும்" என்று அடிக்கடி சொல்லும் சீமான், இம்முறையும் தனித்து களம் இறங்குவதாக உறுதியாக அறிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு செல்லாமல், தனது கட்சியின் வாக்கு வங்கியை மட்டுமே நம்பி போட்டியிடுகிறார். இந்நிலையில், சீமான் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.
தகவல்களின்படி, சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த முறை எப்படியும் சட்டமன்றத்துக்குள் நுழைந்து விட வேண்டும் என்ற முனைப்புடன் இந்த தொகுதியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய், தவெக-வின் உண்மையான பலம் என்ன? டெல்லிக்கு போனது உளவுத்துறை ரிப்போர்ட்! வெளியான ரகசிய சர்வே!
கடந்த நவம்பர் மாதம் காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தின் மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த சீமான், காரைக்குடியை மட்டும் "சஸ்பென்ஸ்" ஆக வைத்திருந்தது இந்த யூகங்களுக்கு வலு சேர்த்துள்ளது.
சீமான் கடந்த காலங்களில் கடலூர் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் இம்முறை "சொந்த மண்ணில் போட்டியிடுவேன்" என்று அவர் கொடுத்த சூசகமான அறிவிப்பும் காரைக்குடியை நோக்கியே கைகாட்டுகிறது. அவரது சொந்த ஊரான அரணையூர் அமைந்துள்ள மானாமதுரை தனித் தொகுதி என்பதால், காரைக்குடி அவருக்கு பாதுகாப்பான மற்றும் செல்வாக்குமிக்க தேர்வாக இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
காரைக்குடி தொகுதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முக்கிய தொகுதி. இங்கு வன்னியர், தேவர், நாடார், முக்குலத்தோர் உள்ளிட்ட சமூகங்கள் செல்வாக்கு மிக்கவை. சீமான் இங்கு தனது "தமிழ் தேசியம்" கொள்கையை முன்வைத்து பலமான வாக்கு வங்கியை உருவாக்க முயல்கிறார். கட்சியினர் கூறுவது: "சீமான் இம்முறை சட்டமன்றத்துக்குள் நுழைவது உறுதி. காரைக்குடியில் அவரது செல்வாக்கு அதிகரித்து வருகிறது."
வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள நாதக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், காரைக்குடி தொகுதி வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சீமான் தானே போட்டியிடுவதை உறுதிப்படுத்துவாரா என்பது தான் இப்போதைய பெரும் எதிர்பார்ப்பு.
சீமானின் தனி போட்டி முடிவு தமிழக அரசியலில் புதிய அலையை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். தேர்தல் களம் இன்னும் சுவாரஸ்யமடைந்து வருகிறது.
இதையும் படிங்க: 2026 தேர்தல் வெற்றிக்கு விஜய் வியூகம்!! தவெக தனித்து நிற்க முடிவு! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!