×
 

2026 தேர்தல் வெற்றிக்கு விஜய் வியூகம்!! தவெக தனித்து நிற்க முடிவு! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

த.வெ.க., சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்ய, நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் கட்சியை வலுப்படுத்தும் நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள மூன்று வேட்பாளர்களை ரகசியமாக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவர்கள் தயாரிக்கும் பட்டியலில் இருந்து ஒருவரை விஜய் தானே வேட்பாளராக அறிவிப்பார். 

இதில் 50 வேட்பாளர்களை பெண்களாக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. தி.மு.க. அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பெண் ஓட்டுகள் சிதறாமல் இருக்க இந்த வியூகத்தை வகுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 21 கூட்டணி கட்சிகளுடன் களமிறங்கும் திமுக! வாக்கு சிதறலை தடுக்க மெகா வியூகம்!! ஸ்டாலின் ஃபார்முலா!

கடந்தாண்டு பிப்ரவரியில் தவெக கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டு கழித்தும் எந்த கட்சியும் இணையவில்லை. வெளிப்படையான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. 

தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் போன்றோர் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறாத நிலையில், தவெக தனித்து போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் குழு நாளை முதல் பிப்ரவரி 11 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் மக்களின் நேரடி கருத்துக்களை சேகரித்து வலுவான தேர்தல் அறிக்கையை உருவாக்க தவெக திட்டமிட்டுள்ளது. 

மேலும், அடுத்த மாதத்தில் விஜய் மீண்டும் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். முதல் கட்டமாக வேலூர், தர்மபுரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு செல்கிறார்.

தி.மு.க. அரசுக்கு எதிராக மாவட்ட வாரியாக போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 2-ம் தேதி கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி முடிந்த பிறகு இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 

234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் தனித்து போட்டியிட விஜய் முடிவு செய்துள்ள நிலையில், இந்த நகர்வுகள் தவெகவின் தேர்தல் தயாரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த விஜய் முயற்சி செய்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
 

இதையும் படிங்க: புலி வாலை புடிச்சிட்டோமோ!! கலக்கத்தில் விஜய்!! ஸ்டாலின் கூட இப்படி பண்ண மாட்டாரு!! தவிக்கும் தவெக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share