×
 

திருமங்கலம் தொகுதி டார்கெட்!! களமிறங்கும் முதல்வர் மருமகன்!! மதுரையில் 10 தொகுதிகளின் வெற்றி யாருக்கு?!

அ.தி.மு.க.,வை சேர்ந்த எதிர்கட்சி துணைதலைவர் உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியை தி.மு.க., வரும் தேர்தலில் கைப்பற்ற வேண்டும் என 'டார்க்கெட்' விதித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் திமுக 10 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் தீவிர ஆலோசனை நடைபெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மாவட்டம், பகுதி, ஒன்றிய செயலாளர்களுடன் தனித்தனியே கூட்டம் நடத்தி வெற்றி உத்திகளை விவாதித்தார். குறிப்பாக அதிமுக துணைத் தலைவர் உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியை இம்முறை திமுக கைப்பற்ற வேண்டும் என்று சபரீசன் கடும் டார்க்கெட் விதித்துள்ளார்.

ஆலோசனை கூட்டங்கள் மூன்று இடங்களில் நடைபெற்றன. வடக்கு, மத்தி, தெற்கு தொகுதிகளுக்கு அமைச்சர் தியாகராஜன் பங்களாவிலும், மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், சோழவந்தான் தொகுதிகளுக்கு ஜி.ஆர்.டி. ஓட்டலிலும், திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகளுக்கு திருமங்கலம் டோல்கேட் அருகே உள்ள ஓட்டலிலும் கூட்டங்கள் நடந்தன. அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன், பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

நிர்வாகிகள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் திமுக களமிறங்குகிறது. மதுரை நகரில் தெற்கு தொகுதி வீக் ஆக உள்ளது. அங்கு சவுராஷ்டிர மக்களின் நீண்டகால கோரிக்கையான என்.எம்.ஆர். சுப்பராமனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். 

இதையும் படிங்க: பீகார் தேர்தலில் மோடி போட்ட அதே ஸ்கெட்ச்!! தமிழகத்தில் ரீப்பீட்! பாஜக பொருளால் அவர்களையே வச்சு செய்த ஸ்டாலின்!

லோக்சபா தேர்தலில் பாஜக அதிக ஓட்டு பெற்றதை சபரீசன் சுட்டிக்காட்டினார். அதற்கு “மோடிக்காக ஓட்டு போட்டனர், சட்டசபை தேர்தலில் அப்படி இருக்காது” என்று பதிலளித்தோம். தெற்கு தொகுதியில் திமுக சின்னத்தில் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

வடக்கு தொகுதியில் அதிமுகவின் டாக்டர் சரவணன் போட்டியிட உள்ளார். அவர் 3 இட்லி ரூ.10-க்கு கொடுத்து மக்களை கவர்ந்து வருகிறார். அவரது சமுதாய ஓட்டு சென்றால் திமுக தோல்வியடையும் என்று சபரீசன் கவலை தெரிவித்தார். அதற்கு “அரசு ஊழியர்கள் ஓட்டு அதிகம் உள்ளது. அவர் பல கட்சி மாறியதால் மக்கள் நம்ப மாட்டார்கள்” என்று சமாளித்தோம்.

மதுரை என்றாலே திமுகவில் அமைச்சர் கோஷ்டி, மாவட்ட செயலாளர் கோஷ்டி என்று பிரிவுகள் உள்ளன. மாநகராட்சி கவுன்சிலர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அனைவரும் ஒரே கோஷ்டியாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று சபரீசன் வலியுறுத்தினார்.

திருமங்கலம் தொகுதியை கைப்பற்றுவதற்கு சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலூர், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி 10 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: 2 நாள் பயணம்!! இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா!! திருச்சி பாஜகவினர் உற்சாகம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share