×
 

முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

1990-களில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகமான பிறகு திட்டக்குழுக்களின் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்தது. தமிழகத்திலும் இதன் பெயரும் அமைப்பும் பல்வேறு ஆட்சிகளில் மாற்றங்களை சந்தித்துள்ளன.

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு ஆலோசனை வழங்கி வந்த மாநில திட்டக்குழு விரைவில் கலைக்கப்படலாம் என்ற தகவல் தலைமைச் செயலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, திட்டக்குழுவில் புதிய துணைத் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள் இதுவரை நியமிக்கப்படாத நிலையில், இந்த அமைப்பின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் விஜய் உள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் ஆகியோர் அலுவல் வழி உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மட்டும் உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் பதவி விலகிய நிலையில், பல பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த சூழலில், திட்டக்குழுவை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு பதிலாக தேவையான துறைகளுக்கு தனித்தனி நிபுணர் குழுக்களை அமைத்து ஆலோசனைகளை பெற அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டபுள் மீனிங், டிரிபிள் மீனிங் பேச்சு? பெண்களை அவதூறாக பேசினால்.. சட்டசபையில் முதல்வர் விஜய் வார்னிங்!

குறிப்பாக, மாநிலத்தின் சொந்த வருவாயை அதிகரிப்பது, நிதி கசிவுகளை கட்டுப்படுத்துவது மற்றும் நிதித் தற்சார்பை மேம்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய அணுகுமுறைக்கு பின்னால், காலத்துக்கு ஏற்ப நிர்வாக முறையை மாற்ற வேண்டும் என்ற அரசின் எண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே அமைப்பை ஆண்டு முழுவதும் பராமரிப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெறுவது பயனுள்ளதாக இருக்கும் என அரசு கருதுவதாக தெரிகிறது.

தமிழக மாநில திட்டக்குழு 1971-ம் ஆண்டு ஏப்ரலில் உருவாக்கப்பட்டது. அப்போது ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், மாநில வளங்களை மதிப்பிட்டு அவற்றை திட்டமிட்டு பயன்படுத்துவது இதன் முக்கிய பணியாக இருந்தது.

1990-களில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகமான பிறகு திட்டக்குழுக்களின் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்தது. தமிழகத்திலும் இதன் பெயரும் அமைப்பும் பல்வேறு ஆட்சிகளில் மாற்றங்களை சந்தித்துள்ளன.

2017-ல் அதிமுக ஆட்சியில் திட்டக்குழுவை மாற்ற முடிவு செய்யப்பட்டு, பின்னர் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உருவாக்கப்பட்டது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் மாநில திட்டக்குழு என்ற பெயர் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்ட இந்த அமைப்பு விஜய் தலைமையிலான புதிய நிர்வாகத்தில் தொடருமா அல்லது புதிய முறைக்கு மாற்றப்படுமா என்பது விரைவில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் நெற்றியில் திடீர் மாற்றம்! கருப்புக்கு பதில் சிகப்பு பொட்டு?! எதிரிகளை வெல்லும் கஜகேசரி திலகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share