×
 

கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

மகளிர் உரிமைத் தொகையால் கிராமப்புற பொருளாதாரம் செழிப்படைந்துள்ள நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் கோவி.செழியன் மேலும் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் நடைபெற்ற "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அமைச்சர் கூறியதாவது: "மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி நெருக்கடி கொடுத்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான நிர்வாக திறமையால் தமிழகம் இன்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 

ஒரு கிராமத்தில் சுமார் 2,500 பெண்களுக்கு இந்த தொகை கிடைக்கிறது. இதனால் மாதம் 25 லட்சம் ரூபாய் கிராமப்புறத்தில் புழங்குகிறது. மளிகை கடைகள், டீக்கடைகள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. கிராமப்புற பொருளாதாரம் செழிப்படைந்துள்ளது."

இதையும் படிங்க: திமுகவில் தலையெடுக்கும் புதிய தலைவர்கள்!! கடுகடுக்கும் ஸ்டாலின்!! உதயநிதிக்கு சிக்கல்!

மக்களை நேரடியாக சந்தித்த அமைச்சர், "தேர்தலுக்கு முன்பே மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கையாக மாற்றும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே. முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்" என்று உறுதி அளித்தார்.

எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், "வரும் தேர்தலில் திமுக தான் முதலிடம் பிடிக்கும். மற்ற கட்சிகள் இரண்டாம் இடத்திற்கு போட்டியிடுகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றதால் பாஜகவுக்கு எரிச்சல் தீரவில்லை. 

அதனால்தான் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் ஓமலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இது உதயசூரியனின் வெற்றிக் கோட்டை. மத்திய அரசின் பாராமுகத்திற்கு தமிழக மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் திட்டம் கோடிக்கணக்கான பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை அளித்துள்ளது. கிராமப்புற பெண்களிடையே ஆளுங்கட்சி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த திட்டம் தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

கோவி.செழியனின் இந்த பேச்சு திமுக தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. தேர்தல் களத்தில் திமுகவின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: ஆட்சி தான் டார்கெட்! அடுத்தடுத்து மாநாடு போடும் திமுக!! செலவை சமாளிக்க முடியாமல் திணறும் மா.செயலாளர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share