×
 

விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்? எஸ்.பி வேலுமணி தரப்பினருக்கு அமைச்சர் பதவி? புதிய அமைச்சர்கள் யார்?

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆனந்த் , ஆதவ் அர்ஜூனா , செங்கோட்டையன் உட்பட 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான 9 அமைச்சர்கள் ஏற்கெனவே பொறுப்பேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் ஓரிரு நாட்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 17-ம் தேதி முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 9 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் தங்கள் துறைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது சில அமைச்சர்களிடம் 2 முதல் 3 துறைகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் கல்வி மற்றும் சுற்றுலாத் துறைகள் காங்கிரஸ் சார்பில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க.வின் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 22 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் பட்ஜெட் தயாரிப்பு உள்ளிட்ட அரசு நிர்வாகப் பணிகளில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றால், அரசின் செயல்பாடுகள் முழு வேகம் பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

த.வெ.க., ஆட்சியின் முதல் கட்ட அமைச்சரவையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரிவாக்கத்தில் யார் யாருக்கு என்ன பொறுப்பு என்பது அரசியல் களத்தில் தீவிர விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளும் உச்சத்தில் உள்ளன.

முதலமைச்சர் விஜய் விரைவில் அமைச்சரவை விரிவாக்க அறிவிப்பை வெளியிட்டு, அரசின் செயல்பாடுகளை முழுமையாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது ஏன்? முதலமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் பணியாளர்கள் கடிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share