வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

AI மாநாட்டில் அத்துமீறல்..! ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவமானம்..!! இளைஞர் காங்கிரஸுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரசார் அத்துமீறியதாக கூறி டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற ஏ ஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரசார் அத்துமீறியதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்ற அத்துமீறலில் இறங்குவதாக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார். 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் சிலர் அரைகுறை ஆடையுடன் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் எனும் பெயரில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி இந்தியா முன்னெடுத்திருக்கும் இந்த மாநாட்டில் மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு, அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த நிகழ்வுகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியிருக்கும் இந்த அநாகரீகமான செயல் கடும் கண்டனத்திற்குரியது என்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சியில் நாட்டின் பொருளாதாரம் தொடங்கி அனைத்து துறைகளும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்து வரும் நிலையில், அதற்கு நேர் மாறாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப் போல கரைந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் இந்திய நாட்டின் மீதான அக்கட்சியின் தேச விரோத எண்ணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும் சாடினார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளை ஒடுக்குவது சர்வாதிகாரப் போக்கு…! திமுகவை கண்டித்த TTV தினகரன்..!

ஐநா சபையின் பிரதிநிதிகள் தொடங்கி பல்வேறு வளர்ந்த நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை ஒன்று திரண்டு பங்கேற்ற இந்த பெருமைமிக்க மாநாட்டில், காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியிருக்கும் இந்த நாடகம், செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் பிரதமரின் நல்லாட்சியை சீர்குலைக்க முயலும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற அநாகரீகமான செயல்பாடுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: சீரழிக்கும் கஞ்சா… திராவிட மாடல் சாதனையா? கிழித்து தொங்கவிட்ட TTV..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी