ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் ... தவெக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை..!! வைரலாகும் வீடியோ..!
ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பேசிய காணொளி வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தலைமையில் கட்சி பெரும் வெற்றியைப் பெற்று, அவர் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பாரம்பரிய அரசியல் கட்சிகளிடமிருந்து மாறுபட்ட ஒரு முக்கிய அம்சம் பேசப்பட்டு வருகிறது. அது, த.வெ.க தரப்பில் ஓட்டுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கப்படவில்லை என்பதாகும்.
இந்த நிலைப்பாட்டை விஜய் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார், மேலும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் இது அவரது வெற்றியின் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, குறிப்பாக சேலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியபோது, “ஓட்டுக்கு யாரும் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். வாங்கிக்கொண்டு காதில் விசில் ஊதி அனுப்புங்கள்” என்று கூறினார்.
இதன் மூலம், எதிர்க்கட்சிகள் பணம் கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொண்டு, த.வெ.கவின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதே நேரத்தில், பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாசாரத்தை மாற்ற வேண்டும் என்றும், இளம் தலைமுறையினர் தங்கள் உரிமையை விற்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அவசர சிகிச்சைப் பிரிவில் அரசு மருத்துவத்துறை..! நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!
இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வாக்கிற்கு 2000 ரூபாய் அளித்ததாக பேசி இருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மேற்கு தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வாக்குக்கு பணம் தந்ததாக ஓமலூர் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அதியமான் கட்சி நிர்வாகிகளிடையே பேசி உள்ளார். பக்கத்து தொகுதியில் பணம் கொடுத்த நிலையில் தான் வாக்குக்கு பணம் கொடுக்காததால் தோற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். வாக்கிற்கு பணம் அளிக்கவில்லை என முதல்வர் பேசி என் நிலையில் சில தினங்களில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இதல்லவா விசுவாசம்..!! என் மகனுக்கு TVK-னு தான் பேரு வெப்பேன்..!! தவெக எம்.எல்.ஏ சுவாரசிய தகவல்..!!