×
 

ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தில் தொடர்புடையதாக கைதாகிய மூன்று பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்ட விவகாரம் சூடு பிடித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து “குதிரை பேரம்” என்பது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. மாற்றுக் கட்சியினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் விளக்கு வாங்குவதாக பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ-வை பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைய வேண்டும் என்று பேரம் பேசியதாக தெரிகிறது.

பேரம் பேசியதாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கட்சித்தாவல் மற்றும் ஆளுநருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிர்த்து வாக்களிக்கும் 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் விவகாரத்தில் 3 பேரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதாக கூறப்பட்டது. 

இதையும் படிங்க: வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

இந்த நிலையில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மூன்று பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு அசிங்கமா இல்லையா..? எடப்பாடியும் தான் உடந்தை..! குண்டைத் தூக்கிப் போட்ட அமைச்சர் நிர்மல் குமார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share