”ஆதரிக்க எடப்பாடியார் போதும்”... இபிஎஸை வரவேற்று தவெகவினர் மீண்டும் பேனர்...!
எடப்பாடி பழனிசாமியை வரவேற்று போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது போன்ற வேலைகளில் தவெகவினர் படு தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்று போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது போன்ற வேலைகளில் தவெகவினர் படு தீவிரமாக களமிறங்கியுள்ளனர். வழக்கமாக கூட்டணி கட்சியினரின் பொதுக்கூட்டம், மாநாட்டிற்கு வரும் தலைவர்களை வரவேற்று அவர்களது கட்சியினர் தவிர கூட்டணி கட்சியினரும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது, கொடியுடன் கூட்டங்களில் பங்கேற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
ஆனால் தவெக - அதிமுக இடையில் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இவ்வளவு ஏன்? கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று கூட அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடையாது. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த போது விஜய்க்கு ஆதரவாக பேசியதோடு, காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது தான் தவறு என்றும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் தான் காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய பாதுகாப்பு தரவில்லை என்ற கோணத்தில் பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்தது.
பாஜக தரப்பில் இருந்து நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எச்.ராஜா, தமிழிசை சவுந்தர ராஜன், வானதி ஸ்ரீனிவாசன் என பலரும் விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்தாலும் கொள்கை எதிரி என விஜய் குறிப்பிட்ட காரணத்தால் பாஜகவை தவெக தொண்டர்கள் ஏற்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி கரூர் விவகாரத்தில் கொடுத்த ஆதரவுக்கு சோசியல் மீடியாக்களில் மனமுருகி நன்றி சொன்ன தவெக தொண்டர்கள், தற்போது அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மாவட்டங்கள் தோறும் பிளக்ஸ், பேனர்கள் வைத்து வேற லெவலுக்கு அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிள்ளையார் சுழியா? சூறாவளியா?... விஜயை கூட்டணிக்குள் இழுக்க இபிஎஸ் போட்ட மெகா கணக்கு... சைலண்ட் மோடில் தவெக...!
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அவல் பூந்துறையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவரை வரவேற்று தமிழக வெற்றிக்கழகத்தினர் பேனர்களை வைத்துள்ளனர். அதில், “நாளை நமதே.. எங்களுடைய கஷ்டமான காலங்களில் எங்களுக்கு தோல் கொடுத்த எடப்பாடி யாருக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம்.. ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாரை வரவேற்கிறோம்.. தலைவா உன்னை எதிர்க்க ஆயிரம் எதிரிகள் இருந்தாலும் உன்னை ஆதரிக்க எடப்பாடியார் போதும்.. விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகம்..” என
விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மற்றும் நாமக்கல்லில் எடப்பாடி பிரச்சாரக் கூட்டங்களில் தவெக கொடிகளை மட்டும் சிலர் பயன்படுத்திய நிலையில் தற்பொழுது தவெகவினர் பேனர்களை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இது வெட்கக்கெடு BRO... அஜித்திற்கு வந்தால் தக்காளி சட்னி... விஜய்க்கு வந்தால் ரத்தமா? - அம்பலமான தவெக...!