×
 

திமுக கூட்டணியில் தேமுதிக... ஒற்றை வார்த்தையில் சிம்பிளாக ஜோலியை முடித்த செங்கோட்டையன்...!

தவெக சார்பாக முதன் முதலில் கோபிசெட்டிபாளையம் முதல்வார்டில் வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளேன்.

கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தமிழகத்தில் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அதுவும் புதிதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதுதான் மக்களின் கனவாக இருக்கின்றது. அந்த கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் அனைவரும் ஒரே கருத்தோடு அரும்பணி ஆற்றி வருகின்றனர். 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் நூற்றுக்கு 95 சதவீதம் பேர் விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதைத்தான் நோக்கமாக சொல்கின்றனர். அந்த அடிப்படையில் விஜயின் சுற்றுப்பயணம் எழுச்சியோடு நடந்து வருகிறது. பல்வேறு விதிமுறைகளின் காரணமாக குறிப்பிட்ட மக்களை தான் காண வேண்டிய சூழல் உள்ளது. மற்றவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். பல்வேறு விதிமுறைகளின் காரணமாக குறிப்பிட்ட சிலரை தான் சந்திக்க முடிகிறது.

100 நாள் வேலைவாய்ப்பை இரண்டு கட்சிகளும் பேசுகின்றனர். 100% மானியத்தை வழங்க வேண்டிய மத்திய அரசு 60% சதவீதம் மத்திய அரசும் 40 சதவீதம் மாநில அரசும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் 100 நாள் வேலை முடங்கியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உருவாகி உள்ளது. அதை தட்டிக் கேட்க வேண்டிய நிலையில் NDA கூட்டணி இல்லை. திமுக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அந்த நிதியை பெற தயாராக இல்லை. 

150 நாட்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. நூறு நாட்களுக்கு அதை சரியாக செய்ய முடியவில்லை. மத்திய அரசு நிதி சரியாக வழங்கப்படவில்லை. மாநில அரசும் 40% நிதியை வழங்கி அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். NDA கூட்டணியில் 150 நாட்கள் வேலை தருவதாக சொல்கின்றனர் ஏன் 100 சதவீதம் கொடுக்கப்படவில்லை என மத்திய அரசை கேட்க இவர்களுக்கு துணிவில்லை. 100 நாள் வேலைவாய்ப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கான பணிகளை தெளிவாக எடுப்போம். ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சியில் இருந்தவர்கள் யாரும் அதைப்பற்றி தெளிவான விளக்கத்தை தரவில்லை அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு ஓட்டு போடுங்க... விசிலுக்கு ஓட்டு போடுங்க..!! தீவிர வாக்குச் சேகரிப்பை தொடங்கிய செங்கோட்டையன்...!!

 தேமுதிக கூட்டணி சேர்ந்தது அவர்களின் விருப்பம் ,அவர்களுக்கு உரிமை இருக்கிறது எங்கிருந்தாலும் வாழ்க. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார்கள் விஜய் எந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார். காங்கிரஸ் தவெகவுடன் இணையுமா நிர்வாகிகள் பலர் தாவெகவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனரே? என்ற கேள்விக்கு,  எல்லோரின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது தமிழ்நாட்டின் மனநிலைக்கு ஏற்ப அரசியல்வாதிகள் அதைத்தான் வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

உரிமை தொகை மற்றும் கோடைகால நிதியாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியது குறித்த கேள்விக்கு, கோடைகாலம் என்பது அல்ல தேர்தல் காலம் என்பதால் இந்த நிதியை வழங்கி உள்ளனர். கூட்டணி குறித்து பொறுத்திருந்து பாருங்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருப்பவர்கள் நான்கைந்து பேர் சீட்டு கேட்கின்றனர். ஒருவருக்கு மட்டும் தான் சீட் தர முடியும் செல்வாக்கு மிக்க இரண்டு பேர் மூன்று பேர் ஒவ்வொரு தொகுதிகளிலும் இருக்கின்றனர்.  அப்பொழுதுதான் பல கூட்டணியில் இருந்து யார் வெளியே வருகிறார்கள்? யாருடன் யார் சேர்கிறார்கள் என்பது தெரியும்.

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் எப்போது தவெகவிற்கு வருகின்றனர்?  பொறுத்திருந்து பாருங்கள். குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது. குறிப்பிட்டுச் சொன்னால் அவர் தவெகவிற்கு வருவதற்கு தடைகளை ஏற்படுத்துவார்கள். தேர்தல் அறிக்கை குறித்து விஜய் ஆய்வு செய்து வருகிறார் . அறிக்கை தெளிவாக மக்கள் எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்வதற்காக எதிர்காலத்தை ஆளக்கூடிய தேர்தல் அறிக்கையாக விஜய் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். தமிழக மக்கள் வியக்கத்தக்க வகையில் தவெக.வின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனக்கூறியுள்ளார். 

இதையும் படிங்க: நயினார் எல்லாம் ஒரு ஆளா? பாஜக- லாம் ஒரு கட்சியா? விஜய் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share